ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த திட்டம் - கார்கள்..! அதென்ன திட்டம்..?

|

நம்மில் பெரும்பாலோனோர்களுக்கு இன்னும் ஒரு ரிலையன்ஸ் சிம் பெறும் போராட்டம் முடியவே இல்லை அதற்குள் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது விரைவில் உங்கள் கார்கள் இணையத்துடன் இணைக்கப்பட இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த திட்டம் - கார்களில்..!

கார் இணைப்பு சேவை :

கார் இணைப்பு சேவை :

வெளியான அறிக்கைகளின் கீழ்ரிலையன்ஸ் ஜியோ ஆனது ஜியோ கார் இணைப்பு சேவை ஒன்றை ஓபிடி எனப்படும் ஆன் போர்ட் டையாக்னைசிஸ் தொழில்நுட்பத்தின் கீழ் நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

2020 :

2020 :

மேலும் இந்த திட்டத்தின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 90% கார்களை இண்டர்நெட் மூலம் இணைக்க ரிலையன்ஸ் ஜியோ குழு திட்டமிட்டுள்ளது.

தகவல்கள் :

தகவல்கள் :

இந்த சேவையை ஓபிடி மூலம் ஜியோ வழங்குமென்ற வதந்தி கிளம்பியுள்ளது மறுபக்கம் ரிலையன்ஸ் கார் மீது மென்பொருள் இடைமுகம் மூலம் தகவல்களை வெளிப்படுத்தும் ஒரு வன்பொருளை நிறுவலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணை அமைப்பு :

துணை அமைப்பு :

இந்த சேவையின் மூலம் எரிபொருள் இன்ஜெக்ஷன், ஆக்ஸிஜன் சென்சார்கள் மற்றும் பல பல்வேறு கார்களுக்கான துணை அமைப்பை உங்களால் அணுக முடியும்.

தேவைகள் :

தேவைகள் :

இதன் மூலம் உங்கள் வாகனத்திற்கு என்னென்ன தேவைகள் வேண்டும், என்னென்ன தவறுகள் நடக்கின்றன என்பதை கண்டறிவதுடன் அதனை சரிப்படுத்தும் செயல்திறனும் வழங்கப்படும்.

நிபுணத்துவம் :

நிபுணத்துவம் :

அதாவது ஓபிடி-யை ஒரு காரின் பணியகத்தில் இருந்து நேரடியாக அணுக முடியாது அதில் இன்னும் சிறிது தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படுகிறது என்றும் இதுசார்ந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைஃபை ஹாட் ஸ்பாட் :

வைஃபை ஹாட் ஸ்பாட் :

அறிக்கையின்படி, ஜியோ கார் இணைப்பு சாதகமானது காரின் ஓபிடி போர்ட்டில் பிளக் மூலம் இணைக்கப் பெற்றிருக்கும். அதில் ஒரு சிம் ஸ்லாட் இருக்கும் உடன் அதில் ஜியோ சிம் நுழைக்கப்பட்டு வைஃபை ஹாட்-ஸ்பாட்டும் சேர்க்கப்படும்.

ஜியோ ஆப் :

ஜியோ ஆப் :

இது சார்ந்த ஜியோ ஆப் ஒன்று வெளியாகுமென்றும், அதன் மூலம் இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியுமென்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வீடியோ :

ஜியோ கார் கனெக்ட் சாதனம் சார்ந்த குறுகிய விமர்சனம் (வீடியோ)

Best Mobiles in India

English summary
Reliance Jio plans to connect 90% of the cars to Internet by 2020. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X