ஜியோ டிவிக்கே 432 லைவ் சேனல்கள் என்றால், ஜியோ டிடிஎச் சேவைக்கு.??

10 பிரிவுகளில் , 15 பிராந்திய மொழிகளில்.!

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் இருந்து தொலைத்தொடர்பு பயனர்கள் இனி எதிர்பார்க்க ஒன்றுமே இல்லை, அனைத்தையும் பெற்றாகி விட்டது. இனி எதிர்பார்க்க வேண்டுமென்றால் ஜியோ டிடிஎச் சேவையில் மூன்று முதல் ஆறு மாத கால இலவச சேவைகளுடன் சேர்த்து எத்தனை சேனல்கள் வழங்கப்படும் என்பதை தான் எதிர்பார்க்க வேண்டும்.?!

அந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டிவிடும் வண்ணம் ஜியோ நிறுவனம் ஒரு சலுகையை வழங்கியுள்ளது. அந்த சலுகை விவரங்களை அறிந்த பின்னர், "அடேங்கப்பா.. அப்போ ஜியோ டிடிஎச் சேவை இதைவிட அதிக சலுகைகளை வழங்கும் போலயே" என்ற எண்ணம் உங்களுக்கும் பிறந்தால் அது சகஜமே.!

432 லைவ் சேனல்கள்

432 லைவ் சேனல்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தை குறிவைத்து 15 பிராந்திய மொழிகளில் 432 லைவ் சேனல்களை இப்போது அதன் ஜியோ டிவி ஆப் மூலம் வழங்குகிறது.

ஹாட்ஸ்டார் பிரீமியம் சேவை

ஹாட்ஸ்டார் பிரீமியம் சேவை

அதுமட்டுமின்றி ஜியோ டிவி பயன்பாடு ஹாட்ஸ்டார் பிரீமியம் சேவையும் இப்போது ஜியோ டிவி பயனர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாட்ஸ்டார் உள்ளடக்க தரவு விருப்பங்களை வரம்புகள் இன்றி ஜியோ டிவி பயனர்கள் அனுபவிக்கலாம்.

எண்ணிக்கையையே அதிகரித்துள்ளது

எண்ணிக்கையையே அதிகரித்துள்ளது

முதலில் இந்த சேவை, ஆறு பிராந்திய மொழிகளில் 200 சேனல்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இப்போது மிக விரைவில் எண்ணிக்கையையே அதிகரித்துள்ளது. இதன் மூலம் கேபிள் தொலைக்காட்சி டிடிஎச் ஆபரேட்டராக களம் காணும் திட்டங்களையும் ஜியோ வகுத்துள்ளது தெளிவாகிறது.

பத்து பிரிவு

பத்து பிரிவு

ஜியோ டிவி இப்போது எட்டு வணிக செய்திச் சானல்கள், 31 பக்தி சேனல்கள், 100 பொழுதுபோக்கு சேனல்கள், 27 இன்போடெயின்மென்ட் சேனல்கள், 23 குழந்தைகள் சேனல்கள், 12 லைஃப் ஸ்டைல் சேனல்கள், 38 திரைப்பட சேனல்கள், 34 இசை சேனல்கள், 139 செய்திச் சானல்கள், மற்றும் 20 விளையாட்டு சேனல்கள் என மொத்தம் பத்து பிரிவுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது.

112-க்கும் மேற்பட்ட

112-க்கும் மேற்பட்ட

ஏர்டெல் நிறுவனமும் அதன் ஆப் மூலம் பல உள்ளடக்க சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் சேவையில் இணைந்த வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களின் ஆப்ஸ்களும் அதன் பயனர்களுக்கு தற்போது முறையே 112-க்கும் மேற்பட்ட மற்றும் 70 சேனல்களை வழங்குகின்றனர்.

ஈரோஸ் நிறுவனத்திடம் கூட்டணி

ஈரோஸ் நிறுவனத்திடம் கூட்டணி

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ டிவி பயன்பாடே அதன் ஜியோ சினிமாவிற்கான ஈரோஸ் நிறுவனத்திடம் கூட்டணி வைத்துள்ளது என்றால், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஜியோ டிடிஎச் சேவைகளின் தரத்தை நம்மால் நிச்சயம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.303/- ப்ரைம் ரீசார்ஜ் செய்யாதீர், மாறாக 100ஜிபி இலவச டேட்டா பெறுங்கள்.!

Best Mobiles in India

English summary
Reliance Jio offers 432 live channels and Hotstar premium service to Jio TV users. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X