ஜியோ ப்ரைம் : ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் 10ஜிபி 'வரையிலான' இலவச டேட்டா.!

ரிலையன்ஸ் ஜியோவின் இலவசங்கள் இன்னும் முடியவில்லை.!

|

மார்ச் 31-ஆம் தேதியோடு இதுநாள் வரை ரிலையன்ஸ் ஜியோ இலவசமாக விலகி வந்த சேவைகளானது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டண சேவைகளாக ஜியோ ப்ரைம் சேவை என்ற பெயரின்கீழ் நாம் பெற முடியும். இன்னும் ஒரு வாரம் கூட முழுதாய் இல்லாத நிலையில் பெரும்பாலான ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்பை பெறவில்லை.

இந்நிலையில் முதலில் ஜியோ நிறுவனம் முற்றிலும் இலவசமாக ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் உறுப்பினராக இணைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மறைமுகமாக ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது. இப்போது மீண்டும் மேலுமொரு "சூப்பர்" சலுகையை வழங்கியுள்ளது. என்ன சலுகை வழங்கியுள்ளது.? அதன் நிஜமான நன்மைகள் என்னென்ன.? அதனை பெறுவது எப்படி.?

புதிய சலுகை

புதிய சலுகை

ரிலையன்ஸ் ஜியோ அதன் மேடையில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு வரும் ஒரு முயற்சியாக ஒரு புதிய ப்ரைம் பயனர்களுக்கான சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ரூ.149/- மற்றும் அதற்கு மேலான ரீசார்ஜ் செய்தால் கூடுதல் தரவு நன்மைகள் வழங்கப்படும் வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளது.

மார்ச் 31-க்குள்

மார்ச் 31-க்குள்

இந்த சலுகையில் கீழ் முறையே 1 ஜிபியில் இருந்து 5ஜிபி மற்றும் 10ஜிபி அளவிலான இலவச கூடுதல் தரவுகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்ய அனுபவிக்கலாம். அதாவது ஹேப்பி நியூ இயர் சலுகை முடிவதற்குள் ரீசார்ஜ் நிகழ்த்த வேண்டும்.

10ஜிபி வரை

10ஜிபி வரை

இந்த புதிய சலுகையின் கீழ் ஜியோ பயனர்கள் அவர்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு ரீஜார்க்கும் 10ஜிபி வரையிலாக இலவச 4ஜி தரவை கோர முடியும். இந்த வாய்ப்பின்படி, நீங்கள் முதலில் ஒரு ஜியோ ப்ரைம் சந்தாதாரராக மாற வேண்டும் பின்னர் ரூ.149/- ப்ரீபெய்டு ரீசார்ஜ் செய்ய நீங்கள் தரவு 2 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற இலவச அழைப்புகள் இணைந்து மேலும் 1ஜிபி இலவச தரவை பெறுவீர்கள்.

கூடுதலாக 10ஜிபி

கூடுதலாக 10ஜிபி

மறுபுறம், ரூ.303/- திட்டம் ரீசார்ஜ் செய்ய 28ஜிபி தரவுடன் இணைந்து இலவசமாக 5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா பெற முடியும் இப்படியாக ரூ.499, ரூ.999, ரூ.1,999, ரூ.4,999, மற்றும் ரூ.9,999 திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு அசல் தரவுடன் சேர்ந்து கூடுதலாக 10ஜிபி அளவிலான இலவச தரவு கிடைக்கும்.

ஒரு முழு ஆண்டு முழுவதும்

ஒரு முழு ஆண்டு முழுவதும்

ஆரம்பத்தில் இந்த வாய்ப்பு ஒரு மாதம் செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது, ஆனால் இப்போது ஒரு முழு ஆண்டு முழுவதும் மாதத்திற்கு 10ஜிபி வரையிலாக இலவச டேட்டாவை அனுபவிக்க ரிலையன்ஸ் ஜியோ அனுமதிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆக இவ்வாறாக 12 மாத கால சுழற்சியில் நீங்கள் மொத்தமாக 120ஜிபி அளவிலான இலவச டேட்டா பெறலாம்.

செல்லுபடியாகும் காலத்தை முடிவு

செல்லுபடியாகும் காலத்தை முடிவு

மேலும், நிறுவனம் ரீசார்ஜ் செல்லுபடியாகும் காலத்தை முடிவு செய்யவும் பயனர்களை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக பயனர்கள் ரூ.2,944 ரீசார்ஜ் செய்து 6 மாத கால ரீசார்ஜ் சுழற்சியில் 10ஜிபி இலவச தரவு பெறலாம் அல்லது 5ஜிபி அளவிலான இலவச டேட்டாவை 9 மாத கால ரீசார்ஜ் சுழற்சிகளில் ரூ.2,727/-க்கும் பெறலாம்.

பெருக்கி கொள்ள வேண்டும்

பெருக்கி கொள்ள வேண்டும்

அதாவது எளிமையாக கூறவேண்டுமென்றால் நீங்கள் ரீசார்ஜ் (ரூ.303 மற்றும் ரூ.499) செய்ய விரும்பும் மதிப்பை எத்தனை மாதத்திற்கு வேண்டுமோ பெருக்கி கொள்ள வேண்டும். இந்த ஜியோ வாய்ப்பை அதிகபட்சமாக 12 சுழற்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே

மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே

இந்த இலவச தரவானது உங்களின் ஒரு நாள் டேட்டா வரம்பு முடிந்ததும் உங்கள் கைகளுக்கு கிடைக்கும் மற்றும் இதை 28 நாள் காலம் முழுவதிலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றும் இந்த ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இறுதிக்கட்ட யுத்தம் : சரிக்கு சமமான சலுகைகள், எது சிறந்தது.?

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio offers 120GB 4G internet for free to its Prime members. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X