ரிலையன்ஸ் ஜியோ MNP : போர்ட் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை.!

மற்ற நெட்வர்க் பயன்படுத்துவோர் ரிலையன்ஸ் ஜியோ சேவைகளைத் தங்களின் மொபைல் நம்பர் மாற்றாமல் பெறும் முன் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

Written By:

இந்தியாவில் அறிமுகமான மூன்றே மாதங்களில் பயனர் எண்ணிக்கையை 26 மில்லியனாக உயர்த்திச் சாதனை படைத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கும் அறிமுகச் சலுகையின் மூலம் ஒட்டு மொத்த பயனர்களையும் ரிலையன்ஸ் ஜியோ ஈர்த்திருக்கிறது.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பொது மக்களுக்குச் சேவைகளை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ, மற்ற நெட்வர்க் பயனர்களைப் போர்ட் செய்யவும் வழி செய்தது. இங்குப் போர்ட் செய்யும் முன் கவனிக்க வேண்டியவற்றைத் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நாடு முழுக்கச் சேவை

ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ தளத்தில் MNP சேவையானது நாடு முழுக்கக் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க யார் வேண்டுமானாலும் தாங்கள் பயன்படுத்தும் நெட்வர்க்கில் இருந்து போர்ட் செய்து கொள்ள முடியும்.

பழைய சிம் கார்டு

MNP சேவையைப் பெற உங்களின் பழைய சிம் கார்டு குறைந்த பட்சம் 90 நாட்கள் பழையதாக இருக்க வேண்டும். ஒரு வேலை இல்லாத பட்சத்தில் போர்ட் செய்ய இயலாது.

யுனிக் போர்டிங் கோடு

அருகாமையில் இருக்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரிற்குச் செல்லும் முன் யுனிக் போர்டிங் கோடு ஜெனரேட் செய்ய வேண்டும். இதைப் பெற PORT என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். அனுப்பிய 15 நாட்களில் யுனிக் போர்டிங் கோடு அனுப்பப்பட்டு விடும்.

திரும்பப் பெறுவது

தவறுதலாக யுனிக் போர்டிங் கோடினை பெற்றிருந்தால் அதனைத் திரும்பப் பெற 24 மணி நேரம் அவகாசம் இருக்கின்றது. இதன் பின் திரும்பப் பெற இயலாது.

ஏழு நாட்கள்

உங்களின் அனைத்துச் சான்றுகளையும் சமர்ப்பித்துப் புதிய சிம் கார்டு வாங்கியதும், ஏழு நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும். சில சமயங்களில் service unavailable பிரச்சனையினை 24 மணி நேரத்திற்குச் சந்திக்க வேண்டியிருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Reliance Jio MNP Terms and Conditions You Should Know Before Porting
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்