ஜியோ : 3 மாத இலவச 100எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பைபர் சேவை ஆரம்பம்.!

புரட்சிகரமான 4ஜி சேவையை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ அதன் பிராட்பேண்ட் இழை சேவையை தொடங்கியுள்ளது.

Written By:

புரட்சிமிக்க 4ஜி சேவை அறிமுகம் செய்து, இந்திய தொலைத்தொடர்பு துறையை முடுக்கிவிட்டு எங்கும் 4ஜி ஆதிக்கம் நிலைக்க காரணமாய் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திகழ்கிறது. இப்போது மீண்டும் மற்றொரு முக்கிய இலக்குடன் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியுள்ளது.

ஜியோ தொலைத் தொடர்பு சேவை வழங்குநரின் கூற்றுப்படி ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் பைபர் சேவையானது முதற்கட்டமாக மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. ஜியோ 4ஜி சேவையை போலவே அதிரடி இலவசங்கள், அதிவேகம் என அசத்தும் இந்த ஜியோ பிராண்ட்பேண்ட் பைபர் சேவையை பற்றிய விரிவான தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

100 எம்பிபிஎஸ் இணைய வேகம்

அறிக்கைகளின்படி ஜியோ பைபர் சேவை 100 எம்பிபிஎஸ் இணைய வேகம் தரும் என்று கூறுபபடுகிறது. இது நிஜமென்றால் இந்தியாவின் பிற 4ஜி சேவைகளை துவம்சம் செய்தது போலவே பிற இந்திய நிறுவனங்களின் பிராட்பேண்ட் சந்தையையும் ஜியோ சீர்குலைத்து விடும் சந்தேகமே வேண்டாம்.

கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது

ஜியோ 4ஜி சிம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் வெல்கம் ஆஃபரின் கீழ் பல இலவச நன்மைகளை நிறுவனம் வழங்கியது என்பதை நாம் அறிவோம். அதேபோல், இந்த பிராட்பேண்ட் பைபர் சேவைக்கும் முதல் மூன்று மாதங்களுக்கு சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே முதல் மூன்று மாதங்களுக்கு அதிக டேட்டா பயன்படுத்தினாலும் கூட கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது

பைபர் டூ தி ஹோம்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த பைபர் டூ தி ஹோம் (FTTH) என்ற கேபிள் நிறுவல் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தொடங்கப்பட்டு விட்டது என்ற அறிக்கைகள் உள்ளன. உடன் அந்த அறிக்கைகளின்படி மும்பையில் சில கட்டிடங்களில் இந்த சேவை உள்ளன என்றும் கூறுப்படுகிறது.

பிராட்பேண்ட் சேவை

குறிப்பாக, ரிலையன்ஸ் பிராட்பேண்ட் சேவை மும்பையில் உள்ள வாக்கேஷ்வர் சாலை கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளது, மற்றும் அங்கு குடியிருப்பாளர்கள் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டதற்கு ஏற்ப இப்போது அறிக்கைகள் சேவையை மும்பையில் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருமுறை சேவை கட்டணம்

இந்த சேவை தில்லி, சென்னை, புனே போன்ற ஏனைய நகரங்களிலும் விரைவில் தொடங்கபப்டும் என்பதும் இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் சார்ந்த தகவல்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் ஜியோ அதன் பயனர்களின் வீடுகளில் ரவுட்டரை நிறுவ ஒருமுறை சேவை கட்டணமாக ரூ.4500/- வசூலிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

ஜியோவின் அடுத்த அதிரடி : ரூ.999 - ரூ.1,500/-க்கு 4ஜி ஸ்மார்டபோன்.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Reliance Jio launches fiber service with 100 Mbps speed and 3 months free validity. Read more about this in Taml GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்