ஜியோ டிடிஎச் : மொக்கையான சேவை & நன்மைகள், தப்பித்தது ஏர்டெல்.!

ஒரு யூடியூப் வழியாக இதன் சேவைப்பயன்பாடுகள் மற்றும் செயல்திறன், தொழில்நுட்பங்கள் போன்ற அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது

By Prakash
|

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவையை கடந்த செப்டம்பரில் தொடங்கி வருகின்ற மார்ச் 31 ,2017 வரை வெல்கம் ஆபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் போன்றவற்றில் இலவச டேட்டா சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகள் இ எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்கள் வழங்கப்படுகின்றது. சமீபத்தில் ஜியோ நிறுவனம் சம்மர் சர்பரைஸ் என்ற பெயரில் ஜூன் மாதம்வரை இலவச இன்டர்நெட் சலுகையை அறிவித்துள்ளது.

புதிதாக வெளி வந்துள்ள செட் டாப் பாக்சிலும் பிராட்பேண்ட் இணைய சேவை வழியாகவே தொலைக்காட்சி சேவையை வழங்கும் அமைப்பை பெற்றுள்ளது ஜியோ நிறுவனம். தற்போது ஒரு யூடியூப் வழியாக இதன் சேவைப்பயன்பாடுகள் மற்றும் செயல்திறன், தொழில்நுட்பங்கள் போன்ற அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜியோ டிடிஎச் திட்டங்கள்:

ஜியோ டிடிஎச் திட்டங்கள்:

ஜியோ டிடிஎச் பேசிக் ஹோம் பேக்,ஜியோ சில்வர் டிடிஎச் பிளான், ஜியோ டிடிஎச் கோல்டு பேக், ஜியோ பிளாட்டினம் பேக் ஃபார் டிடிஎச்,ஜியோ டிடிஎச் மை பிளான்ஸ் (இதில் உங்களுக்கு தேவையான சேனல்களை மட்டும்) போன்ற திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது.

கேட்ச் அப் டிவி:

கேட்ச் அப் டிவி:

ஜியோ தற்போது ஒரு புதிய அறிமுகம் செய்துள்ளது அது கடந்த ஒரு வாரத்தில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை, மறுபடியும் கேட்ச் அப் மூலம் தற்போது பார்க்க முடியும் இது ஒரு நல்ல சேவை. உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது திரைப்படங்களை இனிமேல் மிக எளிமையாக பார்க்கமுடியும். மேலும் 64 ஜிபி பென் ட்ரைவ் போன்றவற்றை மிக எளிமையாக இணைக்கமுடியும்.

ஜியோ இலவசம்;

ஜியோ இலவசம்;

ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவைகள் முதல் சில மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதை தொடர்ந்து குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் பட்சத்தில் மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்பது ஜியோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் போது தெரிந்து கொள்ள முடியும்.

எச்டி சேனல்கள்:

எச்டி சேனல்கள்:

ஜியோ எச்டி சேனல்கள் பொருத்தமாட்டில் ஒரளவு தரம் தான் உள்ளது. என பல்வேறு மக்களின் கருத்தாக உள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவைகள் முதற்கட்டமாக நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் விற்க்கப்படுகிறது.

 ஆப்பிள் :

ஆப்பிள் :

ஜியோடிடிஎச் சேவை ஆனது ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் செட்டப் பாக்சில் இயங்கும் வகையில் இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து நேரடியாக சேவையை வழங்க திட்டமிட்டு வருகின்றதாம். இதன் அடிப்படையில் ஜியோ பிராட்பேண்ட் இணைப்பின் 1ஜிபி வேகத்தின் வாயிலாக டிடிஎச் சேவை இணைத்து தொலைகாட்சி சேவையை வழங்லாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தப்பித்தது ஏர்டெல்:

தப்பித்தது ஏர்டெல்:

தற்போது ஏர்டெல்டிடிஎச் சேவை தான் இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் இன்டர்நெட் வேகம் மிக அருமையாக இருக்கும். மேலும் தெளிவான எச்டி சேனல்கள் போன்றவற்றை கொண்டுள்ளதால் ஜியோவிற்க்கு மிகப் பெரிய போட்டி உள்ளது.

தப்பித்தது ஏர்டெல்:

தப்பித்தது ஏர்டெல்:

தற்போது ஏர்டெல்டிடிஎச் சேவை தான் இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் இன்டர்நெட் வேகம் மிக அருமையாக இருக்கும். மேலும் தெளிவான எச்டி சேனல்கள் போன்றவற்றை கொண்டுள்ளதால் ஜியோவிற்க்கு மிகப் பெரிய போட்டி உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio Is Testing Its DTH STB Service ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X