ரூ.999/- மற்றும் ரூ.1500/-க்கு 2 ஜியோ 4ஜி போன்கள் இன்று அறிமுகம்.!?

8 ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறனுடன் வேறு என்னென்ன அம்சங்கள், எப்போது, எப்படி விற்பனை நடக்கும்.??

|

கடந்த ஜனவரி மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.999/-ல் இருந்து ரூ.1,500/- என்ற விலை நிர்ணயத்திற்கு இடையிலேயான 4ஜி கருவியை அறிமுகம் செய்யப்போவது சார்ந்த முதல் தகவல் வெளியானது. அதை உறுதி செய்யும் வண்ணம் ஒரு அநாமதேய ஆதாரத்தில் இருந்து புகைப்படம் ஒன்றும் கிடைக்கப்பெற்றது.

அந்த புகைப்படத்தில் உள்ள கருவி ஒரு ரிலையன்ஸ் ஜியோ வோல்ட் அம்சம் கொண்ட தொலைபேசியாக இருக்கும் என்றும் மேலும் வெளியான அந்த லீக் புகைப்படத்தில் இருந்து அக்கருவி என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் அறியப்பட்டது.

இன்று அறிமுகம்

இன்று அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகள் முடிவு அதனை தொடர்ந்து ப்ரைம் சேவை ஆரம்பம் ஆகிய விடயங்கள் ஒரு நிலைப்பாட்டை அடைந்துள்ள இந்த தருணத்தில் ரூ.999/- மற்றும் ரூ.1500/- என்ற விலை நிர்ணயத்தில்க் இரண்டு ஜியோ 4ஜி போன்கள் இன்று அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு தொலைபேசிகள்

இரண்டு தொலைபேசிகள்

சேஇட்லவுட் வலைதளத்தின்படி இன்று மார்ச் 3-ஆம் தேதி ரிலையன்ஸ் அதன் இரண்டு தொலைபேசிகள் துவக்கப் போகிறது. மற்றும் அந்த இரண்டுமே 4ஜி தொலைபேசிகளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட், அமேசான்

ப்ளிப்கார்ட், அமேசான்

உடன் அந்த 2 கருவிகளும் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஜியோ கடைகளில் கிடைக்கும். ஜியோ நிறுவனத்தின் பிரபலத்தன்மை காரணமாக வெளியான சில நிமிடங்களில் இக்கருவிகள் விற்றுத்தீரலாம் என்றும் வெளியான அறிவிப்பு தெரிவிக்கிறது.

பொத்தான்கள்

பொத்தான்கள்

இந்தியாவில் இன்னும் ஏகப்பட்ட மக்கள் தொகையினர் ஒரு 4ஜி தொலைபேசி ஆதரவு இல்லாமல் இருக்கும் இந்நிலையில் வெளியாகும் இக்கருவி நிச்சயமாக அவர்களை 4ஜி நெட்வொர்க்கை அனுபவிக்க உதவும் என்றும் இக்கருவிகளில் உள்ள கட்டமைக்கப்பட்ட பொத்தான்கள் மூலம் நேரடியாக ஜியோ பயன்பாடுகளின் சேவைகளை அனுபவிக்கலாம் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

8 ஜிபி

8 ஜிபி

இக்கருவிகள் ஒரு அடிப்படை தொலைபேசிகளாக இருப்பினும் 8 ஜிபி அளவிலான உள் நினைவகம் மற்றும் வைஃபை ஆதரவு கொண்டிருக்கும். ஆனால் ஆண்ட்ராய்டு கொண்டு இயங்காது. எனினும், நீங்கள் இந்த தொலைபேசிகளில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவைகளை பயன்படுத்த முடியும் என்றும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன

ரூ.999/- கருவி

ரூ.999/- கருவி

இக்கருவிகள் அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கும் போது ரூ.999/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள கருவி 2 எம்பி அளவிலான முதன்மை கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா, டி9 கீபேட், வைஃபை ஆதரவு ஆகியவைகள் கொண்டிருக்கலாம்.

ரூ.1500/- கருவி

ரூ.1500/- கருவி

மறுபக்கம் ரூ.1500/- என்ற விலை நிர்ணயம் கொண்ட கருவி 5 எம்பி அளவிலான முதன்மை கேமரா,உடன் அதே டி9 கீபேட், வைஃபை ஆதரவு ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோவின் அழிவு காலம் ஆரம்பமாகிறது - ஏன்.? எப்படி.? எதனால்.?

Best Mobiles in India

English summary
Jio To Launch World’s Cheapest 999 Rs 4G Phone Today. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X