ரிலையன்ஸ் ஜியோ சேவை நிறுத்தமா.?

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் ஜியோ சேவை துண்டிக்கப்படும் நிலை கூட ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் குறுந்தகவல் ஒன்று ஜியோவிடம் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது. அதன் படி முறையான ஆவணங்கள் வழங்காத பயனர்களின் சேவைத் துண்டிக்கப்பட்டு விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள்

பயனர்கள்

தற்சமயம் வரை சுமார் 25 மில்லியனுக்கும் அதிகமானோர் ஜியோ சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அதிவேக 4ஜி டேட்டா பயன்படுத்தி வரும் ஜியோ பயனர்களுக்கு இந்த அறிவிப்பு புதிய பீதியினைக் கிளப்பியிருக்கிறது.

வெரிஃபிகேஷன்

வெரிஃபிகேஷன்

முறையான சான்றுகளை வழங்காத பயனர்களுக்கு ஏற்கனவே ஜியோ சார்பில் குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. வெரிஃபிகேஷன் மேற்கொள்ளாத பயனர்களுக்கு ஜியோ சேவைகள் விரைவில் துண்டிக்கதப்படும்.

பிரபலம்

பிரபலம்

குறுகிய காலகட்டத்தில் இந்தியா முழுக்கப் பரிபலமான ஜியோ மக்களுக்கு இலவச சேவைகளை முதல் மூன்று மாதங்களுக்கு வழங்கி வருகிறது. இத்துடன் ரூ.15,000/- மதிப்புடைய ஜியோ ஆப் சேவைகளையும் வழங்கி வருகிறது. இலவச அழைப்புகள், இண்டர்நெட் மற்றும் ரோமிங் இல்லா சேவை போன்றவை மக்களை அதிகம் ஈர்த்திருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிம் கார்டு

சிம் கார்டு

முதலில் ஆதார் கார்டு எண் மூலம் பயனர்களுக்கு ஜியோ சிம் கார்டு வழங்கப்படுகிறது. அதன் பின் ரிலையன்ஸ் விற்பனை நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று கைரேகை மூலம் சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

ஆக்டிவேட்

ஆக்டிவேட்

பெரும்பாலான பயனர்கள் முறையான வழிமுறைகளைப் பின்பற்றி ஜியோ சிம் வாங்கிவிட்டனர் என்றாலும், பலர் இன்னும் வெரிஃபிகேஷன் வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என ஜியோ தெரிவித்துள்ளது.

வெரிஃபிகேஷன்

வெரிஃபிகேஷன்

தற்சமயம் வரை வெரிஃபிகேஷன் செய்யாதவர்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் வெரிஃபிகேஷன் செய்வோர் தொடர்ந்து ஜியோ சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

வெரிஃபிகேஷன் செய்யும் போது ஆதார் கார்டு கொண்டு செல்வது அவசியம் ஆகும். மேலும் முறையான அடையாள மற்றும் இருப்பிட சான்று உள்ளிட்டவற்றையும் கொண்டு செல்ல வேண்டும். கைரேகை மூலம் வெரிஃபை செய்ததும் இதனை உறுதி செய்யும் குறுந்தகவல் உங்களின் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். இதன் பின் சேவைகளைத் தடையில்லாமல் பயன்படுத்த முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reliance Jio is Asking Customers proper Verification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X