ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர் : இந்த 8 விடயங்களை கவனித்தீர்களா.?

இரண்டாவது இன்னிங்ஸில் களம் காணும் ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆப்ரில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள்.

|

மக்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக காப்பாற்றும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் முகேஷ் அம்பானி ஜியோவின் இலவச சலுகைகளை அடுத்த ஆண்டு மார்ச் இறுதி வரை நீட்டித்துள்ளார். இம்முறை வழங்கப்படும் இலவச சலுகைகளுக்கு 'ஹேப்பி நியூ இயர் ஆபர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் ஜியோவின் முந்தைய அறிமுக சலுகையாக வெல்கம் ஆபரின் கீழ் வழங்கப்பட்ட அதே சலுகைகள் பெயர் மட்டும் மாற்றப்பட்டு அடுத்த 90 நாட்களுக்கு வழங்கப்பட இருக்கிறது, வேறெந்த பெரிய வித்தியாசமும் கிடையாது.

முகேஷ் அம்பானி நேற்று மதியம் ஹேப்பி நியூ இயர் ஆபர் சார்ந்த அறிவிப்பை வெளியிட்டார், அதில் நீங்கள் குறிப்பிட்டு கவனித்திருக்க வேண்டிய 8 விடயங்கள் உள்ளன. அவைகள் என்ன.?

விடயம் #01

விடயம் #01

புதிய ஹேப்பி நியூ இயர் ஆபரில் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. எந்த செலவும் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் இலவசமாக வழங்கப்பட்ட ஹை-ஸ்பீட் டேட்டாவின் அளவு நாள் ஒன்றிற்கு 1ஜிபி மட்டுமே என்று இப்போது குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆபரில் நாள் ஒன்றுக்கு 4ஜிபி வழங்கப்பட்டது

விடயம் #02

விடயம் #02

ஜியோ சந்தாதாரர்களில் 80 சதவீதம் பேர் நாள் ஒன்றிற்கு 1ஜிபி தரவிற்கும் கீழான டேட்டவை தான் பயன்படுத்துகிறார்கள், மீதமுள்ளோர்கள் அதிகப்படியான தரவை பயன்படுத்தி பிற பயனர்களின் பிணையத்தை அடைகிறார்கள் என்று அம்பானி குறிப்பிட்டார். அதானல் தான் பேர் யூசேஜ் பாலிசியின் கீழ் புதிய எல்லை. (நாள் ஒன்றிற்கு 1ஜிபி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விடயம் #03

விடயம் #03

முந்தைய சந்தாதாரர்கள் அதாவது தற்போதுள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் இலவச சேவைகளின் இந்த நீட்டிப்பை தானாக பெறுவர். (இதற்காக புதியதொரு சிம் வாங்க வேண்டிய அவசியமில்லை)

விடயம் #04

விடயம் #04

ஜியோ 2ஜி/3ஜி சேவைகளுக்கும் நுழையாமல் அதன் 4ஜி சேவையையே தொடர்கிறது அதனால் ஜியோ - இந்தியாவின் ஒரே முழுமையான 4ஜி நெட்வர்க் ஆகும் பிற நிறுவனங்கள் 4ஜி, 3ஜி மற்றும் 2ஜி என ஒரு கலவையாக சேவைகளை வழங்குகின்றன. இதனால் தனித்துவமான கவனம் செலுத்தப்பட்டு சிறப்பான 4ஜி சேவையை ஜியோ வழங்கலாம்.

விடயம் #05

விடயம் #05

எல்லாமே இலவசம் என்ற சலுகை முதலில் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது உடன் இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 4-ஆம் தேதியில் இருந்து ஜியோ சேவைக்குள் நுழையும் எவரும் குரல் சேவைகளுக்கோ அல்லது தரவு சேவைகளுக்கோ கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விடயம் #06

விடயம் #06

ஜியோ பயனர்கள் வாழ்க்கை முழுவதிலுமான இலவச அழைப்புகலை எந்த ரோமிங்கும் இன்றி இந்தியா முழுவதும் பெறலாம். தரவு விலை என்று பார்த்தல் உலகிலேயே மலிவான 1ஜிபி டேட்டா ரூ.50/- என்ற விலைக்கு பெறுவர். ஜியோ சந்தையில் சீர்குலையும் வரை, அதன் போட்டியாளர்கள் வழங்கும் விலையை விட கிட்டத்தட்ட ஐந்து முறை குறைவாகவே ஜியோ டேட்டா வழங்கும்.

விடயம் #07

விடயம் #07

அம்பானி ஜியோ மணி மெர்சண்ட் சொல்யூஷன்ஸ் என்பதையும் அறிமுகம் செய்துள்ளார். இதுவொரு மொபைல் பேமண்ட் அப்பிளிக்கேஷன் ஆகும், சிறு வியாபாரிகளிடம் பல்வேறு கட்டத்தில் நிகழும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் செயல்படுத்த இது உதவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விடயம் #08

விடயம் #08

ஜியோ இப்போது முழுமையாக மொபைல் எண் போர்டபிலிட்டியை ஆதரிக்கிறது. இனி ஜியோவிற்கு போர்ட்டபில் செய்யும் வடிககியாளர்களின் தொலைபேசி எண் தக்க வைக்கப்படும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இதுதான் அம்பானியின் மாஸ்டர் பிளான், ஜியோவின் பின்னணி என்ன.?!

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio Happy New Year : Offer 8 points to note. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X