ஜியோ வாசிகளே.. டிசம்பரில் இரண்டு சர்ப்ரைஸ்கள் இருக்கலாம்.!

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு டிசம்பரில் வெல்கம் ஆஃபர் 2 கிடைக்குமா என்பது ஒருபக்கமிருக்க அதன் தரவு வேகம் மேம்படுத்தல் நடக்கும் என்பது உறுதி.

Written By:

ரிலையன்ஸ் ஜியோ சந்தையை எட்டியதும் பல்வேறு வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் அதன் முன்னோட்டம் ஆஃபர் கொண்டு வந்து இலவச வரம்பற்ற அதிவேக 4ஜி இணைப்பினை வழங்கியது.

எனினும், இன்னும் ஒரு மாதம், ரிலையன்ஸ் ஜியோ அதன் முன்னோட்ட ஆஃபரை நிறுத்தி வரம்பற்ற 4ஜி தரவு மற்றும் குரல் அழைப்புகள் ஆகியவைகளை டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. அந்த சலுகை இரண்டாம் பாகமாக நீட்டிக்கப்படும் என்பது ஒருபக்கமிருக்க ஜியோ வாடிக்கையாளர்கள் குறையாக இண்டர்நெட் வேகம், கால் ட்ராப் சிக்கல்கள் என பல பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் உள்ளன.

இந்த அனைத்திற்குமே டிசம்பர் மாத இடையில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஜியோ வாசிகளுக்கு சர்ப்ரைஸாக கூட அமையலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பிணைய மேம்படுத்தல் வேலை

ரிலையன்ஸ் ஜியோ அதன் பிணைய மேம்படுத்தல் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது, மற்றும் வெல்கம் ஆஃபர் டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஆக விரைவில் முன் வரும் சில வாரங்களில் தரவு வேகத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ஜியோ பணியாற்றி வருகிறது.

முந்தைய ஜியோ வேகத்தோடு ஒப்பிடும் போது

அனைத்து வாடிக்கையாளர்களும் அல்ல ஆனால் பல ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் முந்தைய ஜியோ வேகத்தோடு ஒப்பிடும் போது இப்போதைய வேகம் நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு

ஆரம்பத்தில், ஜியோ மீது மோசமான வாடிக்கையாளர் சேவை என்ற புகார்கள் அதிக அளவில் ஏற்பட்டன. எனினும், அது ரிலையன்ஸ் ஜியோ பயனர் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு நல்ல நெட்வொர்க் வழங்க அதன் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது இப்பொது தெரிய வருகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இரண்டாம் அறிமுக சலுகை

தொலை தொடர்பு ஆப்ரேட்டர் கூறியது போல, ரிலையன்ஸ் ஜியோ அதன் பிணைய வேகத்தை சீர் செய்து தரவு இணைப்பு வேகத்தை அதிகம் வழங்கும். உடன் இணைப்பு புள்ளிகளை அதிகமான சேர்ப்பதன் மூலம் அதன் அழைப்பு துளி பிரச்சினையிலும் பெருவாரியான தீர்வை காணும், அதே சமயம் இரண்டாம் அறிமுக சலுகை வழங்கப்பட வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை எழுந்துள்ளது

இதனுடன் சேர்த்து ரிலையன்ஸ் ஜியோ நாட்டில் எல்டிஇ மட்டும் என்ற பிணைய உரிமத்தை சமீபத்தில் பெற்றது. எனினும், டிராய் ஜியோ தான் நாட்டின் மெதுவான 4ஜி நெட்வொர்க் என்று கூறியுள்ளதும் மற்றும் ஜியோ அதன் அனைத்து சிக்கல்களையும் மிக விரைவில் சீர் செய்யும் என்று வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Reliance Jio Expected to Improve Data Speeds By Mid December. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்