உலக சாதனைப் படைத்த ரிலையன்ஸ் ஜியோ!

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்டு முதல் மாதத்திலேயே உலக சாதனை புரிந்து விட்டதாக அந்நிறுவனம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ரிலையன்ஸ் ஜியோ சேவையினை சுமார் 16 மில்லியன் பேர் இணைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

புதுவரவு

புதுவரவு

4ஜி சந்தையில் புதுவரவு நிறுவனமான ஜியோ உலகளவில் மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட அதிவேக வளர்ச்சியினை சந்தித்திருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஜியோ அறிமுக சலுகைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றது. ஜியோ சேவை ஒவ்வொரு இந்தியரிடமும் டேட்டா வழங்கும் என ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

சேவை

சேவை

மக்கள் எங்களது நோக்கத்தைப் புரிந்து கொண்டு எங்களின் சேவையை பயன்படுத்துவது மகிழ்ச்சியளிக்கின்றது. பயனர் நலன் கருதி எங்களது சேவையினை நாளுக்கு நாள் மேம்படுத்தி அவர்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வோம் என ரிலையன்ஸ் ஜியோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

ஜியோ என்பது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அங்கமாகும், இந்நிறுவன சேவைகள் செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42 வது ஆண்டு கூட்டத்தில் குறைந்த காலகட்டத்தில் ஜியோ சேவையானது 100 மில்லியன் பயனர்களை அடைய முயற்சிக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

போட்டி

போட்டி

முதற்கட்ட சோதனையில் 1.5 மில்லியன் பயனர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய டெலிகாம் சந்தையில் அறிமுகமாகியிருக்கும் ஜியோ மற்ற நெட்வர்க்களிடன் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சலுகை

சலுகை

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் ஜியோ முதல் நான்கு மாதங்களுக்கு இலவச டேட்டா சேவைகளை வழங்கி வருகின்றது. அதன் பின் வழங்கும் சேவைகளுக்கான கட்டணங்கள் ரூ.19/- இல் துவங்கி அதிகளவு ரூ.4,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வோடபோன்

வோடபோன்

ஆகஸ்டு மாதத்தைப் பொருத்த வரை வோடபோன் சுமார் 200 மில்லியன் பயனர்களுடனும், ஐடியா 177 மில்லியன் பயனர்களையும் கொண்டிருந்தது. ஏர்செல் சுமார் 89.7 மில்லியன் பயனர்களையும், டெலிநார் 53.2 மில்லியன் மற்றும் எம்டிஎன்எல் 3.6 மில்லியன் பயனர்களையும் கொண்டுள்ளது. இவை ஆகஸ்டு இறுதி வரையிலான கணக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்டெல்

ஏர்டெல்

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் (3ஜி+4ஜி) சுமார் 35 மில்லியன் ஆகும். வோடபோன் மற்றும் ஐடியா சுமார் 25 மில்லியன் பிராட்பேண்ட் பயனர்களைக் கொண்டுள்ளன.

எண்ணிக்கை

எண்ணிக்கை

இந்நிறுவனங்கள் இந்த எண்ணிக்கையினை சுமார் 15 ஆண்டுக் காலத்தில் எட்டியுள்ளன. ஆனால் ஜியோ 16 மில்லியன் பிராட்பேண்ட் பயனர்களை 26 நாட்களில் எட்டியுள்ளது. அக்டோபர் இறுதியில் ஜியோ சுமார் 35 மில்லியன் 4ஜி பயனர்களைக் கொண்டிருக்கும் எனச் சந்தை வல்லுநர்கள் சார்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reliance Jio claims world record, enrols 16 mn users in first month

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X