முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான் - ஜியோ 5ஜி, விரைவில்.!

எந்தவொரு துறையையும் விட்டுவைக்க கூடதென்று ஒரு முடிவோடு இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவைக்குள் காலடி எடுத்து வைக்கிறது

|

ஒரு மாதம் முழுக்க "பொத்தி பொத்தி" பாதுகாத்து பயன்படுத்திய 150 எம்பி அளவிலான 2ஜி டேட்டா, 600 எம்பி அளவிலான 3ஜி டேட்டா எல்லாம், ஜியோ 4ஜி சேவையின் வருகையின் மூலம் ஏற்கனவே மலையேறிவிட்டன. இப்போது 1ஜிபிக்கும் மேலான 4ஜி டேட்டாவை அனுபவித்து பழக்கப்பட்டு விட்ட கடைக்கோடி இந்தியர்களுக்கு கூட 5ஜி என்பது ஒரு எளிமையான அடுத்தப்படியாகத்தான் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.!

சமீபத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நோக்கியா நிறுவனம் உடனான ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 5ஜி மற்றும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் பயன்பாடுகள் ஆகிய பகுதிகளில் இணைந்து பணியாற்ற திட்டமிடல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக, எந்தவொரு துறையையும் விட்டுவைக்க கூடதென்று ஒரு முடிவோடு இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவைக்குள் காலடி எடுத்துவைப்பதை உறுதிபடுத்தியுள்ளது.

ஐ&ஜி

ஐ&ஜி

இந்தியா முழுவதும் தற்போதைய லாங் டெர்ம் எவலூசன் (LTE) மொபைல் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, சாம்சங் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நேற்று) அதன் புதுமையான "ஐ&ஜி (இரகசியமானது மற்றும் வளர்ச்சி)" திட்டத்தை ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிமிடெட் உடன் இணைந்து செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

நெட்வொர்க் திறன்

நெட்வொர்க் திறன்

இதன் மூலம் தற்போதைய நெட்வொர்க் திறன் விரிவாக்கம் அடைவதோடு சேர்த்து நல்ல நெட்வொர்க் கவரேஜ் ஆகியவைகளையும் இந்த திட்டத்தின்கீழ் பலப்படுத்தப்படும்.

சேவைகள் நீளும்

சேவைகள் நீளும்

இந்த திட்டம் மூலம் இந்திய மக்கள் தொகையில் 90 சதவீத அளவிற்கு ஜியோ சேவை சென்றடையும், விரிவடையும் அதாவது கிராமப்புற பகுதிகள் முழுக்க ஜியோ சேவைகள் நீளும் மற்றும் அதே சமயம் அடர்த்தியான நகர்ப்புற பகுதிகளில் இசைவான உட்புற மற்றும் வெளிப்புற கவரேஜ் செயல்படுத்தப்படும்.

கேம்-சேஞ்சிங்

கேம்-சேஞ்சிங்

"நாங்கள் வெற்றிகரமாக 170 நாட்களில் 100 மில்லியன் சந்தாதாரர்கள்ளை அடைந்து விட்டோம். இதனை தொடர்ந்து நாங்கள் உயர்ந்த சுற்றுச்சூழல், மொபைல் உள்ளடக்கம், அனைத்து ஐபி நெட்வொர்க்குகள் மற்றும் தற்போதைய செயல்பாடு கண்டுபிடிப்புகள் அடங்கிய ஒரு "கேம்-சேஞ்சிங்" டிஜிட்டல் அனுபவங்களை இந்தியாவிற்கு வழங்கவுள்ளோம்" என்று ஜோதின்ர தாக்கர், ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தலைவர் தெரிவித்துள்ளார்.

திறன்மிக்க எல்டிஇ

திறன்மிக்க எல்டிஇ

"உண்மையான திறன்மிக்க எல்டிஇ, பான்-இந்தியா ஆகியவைகளை அறிமுகம செய்வதின் மூலம் நாம் இதை சாத்தியப்படுத்த முடியும். இது சார்ந்த வேலையில் அர்ப்பணிப்புடன் களமிறங்காவுள்ளோம்" என்றும் ஜோதின்ர தாக்கர் தெரிவித்துள்ளார்.

எல்டிஇ கோர்

எல்டிஇ கோர்

இதற்கு முன்பு சாம்சங் நிறுவனம் எல்டிஇ கோர், அடிப்படை நிலையங்கள் மற்றும் வோல்ட் சேவைகள் அதற்கு தேவையான தீர்வுகளை, அத்துடன் பயன்படுத்தல் சேவைகள் ஆகியவைகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு வழங்கி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய

உலகின் மிகப்பெரிய

உடன் சாம்சங் மற்றும் ரிலைன்ஸ் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் வெற்றிகரமாக உலகின் மிகப்பெரிய பச்சைப்புல்வெளி எல்டிஇ நெட்வொர்க்கை நிறுவியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நெருக்கமாக பணியற்றி

நெருக்கமாக பணியற்றி

இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் செல்கள் ஏன அளவிலான ஒரு மிகப் பெரிய அளவில் இந்த திட்டம் ஈடுபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் ரிலைன்ஸ் ஜியோவுடன் மிக நெருக்கமாக பணியற்றி எல்டிஇ-அட்வான்ஸ்டு ப்ரோ மற்றும் 5ஜி ஆகிய புதிய உதாரணங்களை உருவாக்க முயற்சி செய்வோம்" என்று யோங்கி கிம், சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தலைவர் மற்றும் நெட்வொர்க்ஸ் வர்த்தக தலைவர், கூறியுள்ளார்.

உயர்ந்த சேவை

உயர்ந்த சேவை

சாம்சங் வோல்ட், தர கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு (VoMA) மற்றும் அறிவாற்றல் போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் ஆப்டிமைஸர் போன்ற தொழில்முறை தீர்வுகளையும் ஜியோ நிறுவனதிற்கு சாம்சங் வழங்குவதன் மூலம் அதன் பயனர்களுக்கு ஒரு உயர்ந்த சேவையை பெற முடியும் என்றும், யோங்கி கிம் கூறியுள்ளார்.

டர்ன்-கீ

டர்ன்-கீ

ஜியோ மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே உண்டான் உறவானது, 2012 ஆம் ஆண்டில் இரண்டு நிறுவனங்கள் டர்ன்-கீ ஒப்பந்ததில் (உபகரணங்கள் நடைமுறை மற்றும் பராமரிப்பு சேவைகள்) கையெழுத்திட்ட போது தொடங்கியது என்றும் யோங்கி கிம் குறிப்பிட்டுள்ளார்.

பங்காளி

பங்காளி

ஜியோ நிறுவனத்தின் எண்ட்-டூ-எண்ட் எல்டிஇ தீர்வுகளுக்கான பங்காளி என்ற முறையில், சாம்சங் நிறுவனம் ஜியோவின் வின் மிகப்பெரிய வெற்றிக்கு பங்களிப்புச் செய்வதில் ஒரு பெரிய சந்தோஷம் கொள்கிறது. இலவசமாக உயர் வரையறை அழைப்புகளை (வோல்ட்) இந்தியாவில் முதலில் அறிமுகபப்டுத்தியதும் ஜியோ தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா + பிஎஸ்எஸ்எல் + ஒப்பந்தம் = 5ஜி.!

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio to bring 5G to India with Samsung. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X