ரிலையன்ஸ் ஜியோ வேகம் குறைந்திருப்பது உண்மையா??

By Meganathan
|

சேவைகளைத் துவங்கிய முதல் மாதத்திலேயே சுமார் 16 மில்லியன் பயனர் எண்ணிக்கையை எட்டியிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது. இந்த எண்ணிக்கை வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் சேவைகளை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே சமயம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா வேகம் குறைந்து வருவதாக Ookla ஸ்பீட் டெஸ்ட் மூலம் தெரியவந்திருக்கின்றது. உண்மையில் ஜியோ வேகம் எப்படி இருந்தது, தற்சமயம் அது எவ்வாறான மாறுதல்களை அடைந்திருக்கின்றது என்பதைப் பற்றி வரிவாக தெரிந்து கொள்வோமா?

பிரீவியூ சேவை

பிரீவியூ சேவை

செப்டம்பர் 5 ஆம் தேதி சேவைகள் அனைவருக்கும் வழங்கப்பட்ட நிலையில், பலரும் இந்தச் சேவைகளை ஜியோ பிரீவியூ ஆஃபர் மூலம் பயன்படுத்தி வந்தனர். செப்டம்பர் மாதத்திற்குப் பின் பல்வேறு பயனர்களும் ஸ்பீட் டெஸ்ட் ஆப் மூலம் ஜியோ வேகத்தினை சோதனை செய்து வருகின்றனர்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குறைவு

குறைவு

ரிலையன்ஸ் ஜியோ பிரீவியூ ஆஃபரின் போது ஜியோ 4ஜி வேகம் நொடிக்கு 20 முதல் 25 எம்பியாக இருந்தது. ஆனால் சமீபக நாட்களாக வேகம் நொடிக்கு 5 எம்பி வரை குறைந்திருக்கின்றது.

அறிக்கை

அறிக்கை

பெரும்பாலானோரும் ஜியோ வேகம் குறித்து புகார் தெரிவிக்கத் துவங்கியிருக்கும் நிலையில் வெளியான அறிக்கையின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தகவல்

தகவல்

ஜியோ இண்டர்நெட் வேகம் அதிகபட்சம் நொடிக்கு 135 எம்பி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்சமயம் கிடைக்கும் வேகமானது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

அழைப்புகள்

அழைப்புகள்

ஜியோ இண்டர்நெட் வேகம் ஒருபக்கம் குறைந்து வரும் நிலையில் ஜியோ சேவையில் இருந்து மற்ற நெட்வர்க்களுக்கு வாய்ஸ் கால் செய்வதில் பிரச்சனை இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் வாய்ஸ் கால் சேவைகள் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்குத் தொடர்ந்து பிரச்சனையளிக்கும் விதமாகவே இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நிலைத்தன்மை

நிலைத்தன்மை

ஜியோவை பொருத்த வரை தற்சமயம் நிலைத்தன்மை மட்டுமே தேவைப்படுகின்றது. ஏற்கனவே அறிவித்து துவக்கத்தில் மட்டும் சீராக வழங்கப்பட்ட சேவைகள் மீண்டும் துவங்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இன்டர்கனெக்ட்

இன்டர்கனெக்ட்

ஜியோ வாய்ஸ் கால் சேவைகளைப் பொருத்த வரை மற்ற நெட்வர்க்களுடனான இன்டர்கனெக்ட் பிரச்சனை காரணமாக இருந்து வருகின்றது. மேலும் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reliance Jio 4G Speeds Have Totally Gone Down

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X