ரிலையன்ஸ் ஜியோ ஐந்து பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்..

Written By:

எல்லாமே இலவசம் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றை வரை பலரும் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இன்றும் பலருக்கு ஜியோ சிம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.

ஏற்கனவே சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்துவோர் குறைவான வேகம், கால் டிராப் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ சேவைகளில் பல்வேறு கோளாறுகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அதிகம் ஏற்படும் ஐந்து பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளையும் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஜியோ சிம் சரியாக வேலை செய்யவில்லை

முதலில் ஜியோ சிம் சப்போர்ட் செய்யும் 4ஜி கருவியினை வைத்திருக்க வேண்டும். ஒரு வேலை 3ஜி போன் வைத்திருக்கும் பட்சத்தில் அதிலும் ஜியோ சிம் பயன்படுத்த முடியும். ஆனால் அனைத்து ஜியோ சலுகைகளையும் பெற முடியாது.

தீர்வு: ரிலையன்ஸ் ஜியோ சிம் சீராக வேலை செய்ய சரியான 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அவசியம் ஆகும்.

 

டூயல் சிம் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யவில்லை

பெரும்பாலான பயனர்களும் டூயல் சிம் கொண்ட தங்களது ஸ்மார்ட்போன்களில் ஜியோ சிம் சரியாக வேலை செய்யவில்லை எனக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தீர்வு: ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை பிரைமரி சிம் கார்டு ஸ்லாட்டில் பொருத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் சீரான ஜியோ சேவையினை பெற முடியும்.

 

ஜியோ சிம் பெயர் காட்டவில்லை

சில பயனர்கள் தங்களது கருவியில் ஜியோ சிம் பெயரே காட்டவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனை பெரும்பாலும் டூயல் சிம் போன்களில் அதிகம் ஏற்படுகின்றது.

தீர்வு: இந்தப் பிரச்சனைக்கு சிம் கார்டினை கழற்றி, மீண்டும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

 

சிக்னல் கிடைக்கவில்லை

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு பெயர் தெரிந்தும், கருவியில் ஜியோ சிக்னல் கிடைக்கவில்லையெனில் சில வழிமுறைகளைப் பின்பற்றி இதனைச் சரி செய்ய முடியும்.

தீர்வு: இதற்கு Settings → Mobile Networks → Preferred Network Type சென்று LTE only ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

 

அழைப்புகள்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு மூலம் சில சமயங்களில் அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது டெலி-வெரிபிகேஷன் நிறைவடையாததால் ஏற்படலாம். இந்த வழிமுறையினை சரியாக பின்பற்றும் வரும் இந்தப் பிரச்சனையை சரி செய்ய இயலாது.

தீர்வு: ஜியோ 4ஜி சிம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள ஜியோஜாயின் ஆப் பயன்படுத்தலாம். இந்த ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Reliance Jio 4G SIM, 5 Common Problems and Fixes Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்