எக்கச்சக்க இலவசங்களுடன் ஜியோ 4ஜி : செப்டம்பர் 5 முதல் துவங்குகின்றது.!!

By Meganathan
|

நாடு முழுக்க எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் துவங்கப்பட இருக்கின்றது. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இதற்கான அறிவிப்பை வழங்கினார். ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையின் முக்கிய அம்சங்கள்

ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் அறிமுக சலுகையாக செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 31, 2016 வரை அனைத்துச் சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

எக்கச்சக்க இலவசங்களுடன் ஜியோ 4ஜி : செப்டம்பர் 5 முதல் துவங்குகின்றது.

அனைத்து வாய்ஸ் கால்களும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது, பயனர்கள் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ரிலையன்ஸ் ஜியோ சேவையில் ரோமிங் கட்டணங்கள் முற்றிலும் இலவசம் ஆகும். இந்தியா முழுக்கு எங்குச் சென்றாலும் சாதாரண கட்டணம் தான் வசூலிக்கப்படும்.

மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட 10இல் ஒரு பங்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி 1 ஜிபி டேட்டா ரூ.50க்கு வழங்கப்படுகின்றது. மாணவர்களுக்குக் கூடுதல் சலுகை வழங்கும் விதமாக சுமார் 25 சதவீதம் வரை கூடுதல் டேட்டாவும், அதிகபட்ச டவுன்லோடு வேகம் 135 MBPS வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்கச்சக்க இலவசங்களுடன் ஜியோ 4ஜி : செப்டம்பர் 5 முதல் துவங்குகின்றது.

டிசம்பர் 31, 2017 வரை தொடர்ந்து ஜியோ சேவையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ரூ.15,000 மதிப்புள்ள ஜியோ ஆப் புக்கிங் ஆண்டு சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். உலகின் மிகப்பெரிய 4ஜி எல்டிஇ நெட்வர்க் வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கின்றது. மேலும் டேட்டா பற்றாக்குறை கொண்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா விரைவில் வெளியேறிவிடும்.

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் டிசம்பர் 2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் லைஃப் பிரான்டு ஸ்மார்ட்போன் கருவிகளை ரூ.2,999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி தவிர 5ஜி மற்றும் 6ஜி சேவைகளை சப்போர்ட் செய்யும் என்றும் ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு eKYC மூலம் அதிவேகமாகச் சேவைகள் ஆக்டிவேட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio 4G services Live from september 5 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X