மவுனம் கலைத்த அம்பானி : 4 மாதம் கழித்து என்ன விலை கொடுக்க வேண்டும்.?

|

ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுக சலுகையில் வரம்பற்ற இலவச தரவுகளில் மூழ்கி திளைக்கும் வாடிக்கை யாளர்கள் அனைவரின் ஒரே கேள்வி என்னவெனில் - ரிலையன்ஸ் ஜியோவின் இந்த அறிமுக சலுகை முடிந்த மேற்கொண்டு ஜியோ சலுகைகளை பெற நாம் கொடுக்க வேண்டிய விலை என்ன..?? ரிலையன்ஸ் ஜியோவின் கட்டண திட்டங்கள் என்னவாக இருக்கும்.??

இந்த கேள்விகளுக்கான பதில் கொண்டவர் முகேஷ் அம்பானி மட்டும் தான். இறுதியாக அவர் மவுனம் கலைக்க எம்மாதிரியான கட்டணங்களை ரிலையன்ஸ் ஜியோ வகுக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

 வகுக்கப்போவதில்லை :

வகுக்கப்போவதில்லை :

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால்களுக்கு எந்த விதமான கட்டணத்தையும் வகுக்கப்போவதில்லை என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

4ஜி டேட்டா  :

4ஜி டேட்டா :

உடன் 4ஜி டேட்டா சார்ந்த கட்டணமானது போட்டியாளர்கள் கட்டணத்தில் ஒரு பகுதியை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

கனரக பயனர் :

கனரக பயனர் :

அதாவது ஜியோ 1 ஜிபிக்கு வெறும் 50 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டுமென்றும் கனரக பயனர்களுக்கு சிறப்பு கட்டண விலையில் (ரூ.25) அதே அளவிலான தரவு வழங்கப்படும் என்றும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

கட்டணம் :

கட்டணம் :

"சுருக்கமாக டேட்டா அல்லது வாய்ஸ், ஏதாவது ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும்படி இருக்குமே தவிர இரண்டிற்கும் அல்ல" என்று அம்பானி விளக்கமளித்துள்ளார்.

ரோமிங் கட்டணம் :

ரோமிங் கட்டணம் :

இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வெர்க்கிற்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனாளிகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

உள்நாட்டு குரல் அழைப்பு :

உள்நாட்டு குரல் அழைப்பு :

"அனைத்து உள்நாட்டு குரல் அழைப்புகளுக்கும் கட்டணங்கள் என்பதற்கு ரிலையன்ஸ் ஜியோ முற்றுப்புள்ளி வைத்து விட்டது" என்றும் அம்பானி தெரிவித்தார்.

4ஜி டேட்டா :

4ஜி டேட்டா :

உடன் 4ஜி டேட்டாவானது அனைத்து வகையான பயனர்களுக்கும் மலிவான விலையில், அவர்கள் பெறக்கூடிய விலையில் இருக்க வேண்டும் என்றும் அம்பானி கூறினார்.

நிர்ணயம் :

நிர்ணயம் :

அதாவது, தற்போதைய சந்தை நடைமுறையில் தரவானது ஒரு அடிப்படை வட்டி விகிதத்தில் ரூ.4,000 முதல் ரூ.10,000 என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், ஜியோ அதன் 10-ல் ஒரு பங்கு அடிப்படை விலை கொண்டது என்று அம்பானி கூறியுள்ளார்.

5 பைசாவிற்கு ஒரு எம்பி :

5 பைசாவிற்கு ஒரு எம்பி :

அதாவது எங்கள் தரவு திட்டங்கள் 5 பைசாவிற்கு ஒரு எம்பி அல்லது ரூ50/-க்கு ஒரு ஜிபி என்ற விகிதத்தில் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

25 சதவீதம் கூடுதல் தரவு :

25 சதவீதம் கூடுதல் தரவு :

முக்கியமாக சரியான அடையாள அட்டையுடன் ஜியோ பதிவு செய்யும் மாணவர்களுக்கு திட்டங்களில் 25 சதவீதம் கூடுதல் தரவு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

3ஜி போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி..?
ஜியோ 5ஜி : ரிலையன்ஸின் வியாபாரமும், ராஜ தந்திரமும்..!
ஆண்ட்ராய்டில் ஜியோசாட் ஹிஸ்டரியை அழிப்பது எப்படி..?

Best Mobiles in India

English summary
Reliance Jio 4G Plans Prepaid and Data Tariff After 4 Months. Read more about this Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X