பெரும்பாலான 4ஜி கருவிகளுக்கு ஜியோ சிம் விநியோகம்.!?

Written By:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரீவியூ சேவை சில தினங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்ட எல்ஜி மற்றும் சாம்சங் கருவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த பிரீவியூ சேவையின் மூலம் பயனர்கள் 90 நாட்களுக்கு எல்லையில்லா இலவச அழைப்பு மற்றும் இண்டர்நெட் டேட்டா பயன்படுத்த முடியும்.

பெரும்பாலான 4ஜி கருவிகளுக்கு ஜியோ சிம் விநியோகம்.!?

இதையும் பாருங்கள் : ஏர்டெல் அதிரடி : 10ஜிபி 4ஜி இண்டர்நெட் சலுகை அறிவிப்பு.!

இந்தச் சேவையினை பயன்படுத்த மைஜியோ ஆப் டவுன்லோடு செய்த கோடினை பிரின்ட் அவுட் எடுத்துச் செல்ல வேண்டும். தற்சமயம் வெளியான தகவல்களின் படி அனைத்து 4ஜி சேவைக் கொண்ட கருவிகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதையும் பாருங்கள் : சாம்சங் போனுடன் இலவச ஜியோ சிம் பெறுவது எப்படி?

ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இது சார்ந்த சந்தேகங்களுக்குப் பதில் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி ரிலையன்ஸ் ஜியோ பிரீவியூ சேவை தற்சமயம் லைஃப், எல்ஜி சாம்சங் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் வெளியான தகவல்களின் படி பல்வேறு இதர 4ஜி கருவிகளுக்கும் ஜியோ சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Reliance Digital stores issuing Jio SIM cards for most 4G phones Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்