பண்டிகை கால சிறப்புச் சலுகைகள் ரிலையன்ஸ் அறிவிப்பு!

Written By:

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது தற்போதைய மற்றும் புதிய பயனர்களுக்குப் பண்டிகைக் காலச் சலுகைகளை அறிவித்துள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..

பண்டிகை கால சிறப்புச் சலுகைகள் ரிலையன்ஸ் அறிவிப்பு!

தில்லியைச் சேர்ந்த ரிலையன்ஸ் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்கள் 'NonStop Plan' திட்டத்தின் மூலம் 1000 லோக்கல் மற்றும் STD நிமிடங்களைப் பெற முடியும் என்றும் அனைத்து ரிலையன்ஸ் எண்களுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரீபெயிட் பயனர்கள் அறிமுக சலுகையின் கீழ் முழு டாக்டைம், இலவச டேட்டா மற்றும் சிறப்பு அழைப்பு கட்டணம் உள்ளிட்டவற்றைப் பெற முடியும். தில்லியில் DoubleScoop Plan' மூலம் ரூ.141க்கு ரீசார்ஜ் செய்து முழு டாக்டைம், 5 ஜிபி டேட்டா, மற்றும் நிமிடங்களுக்கு 25 பைசாவில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும், இதற்கான வேலிடிட்டி மூன்று மாதங்கள் ஆகும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பண்டிகை கால சிறப்புச் சலுகைகள் ரிலையன்ஸ் அறிவிப்பு!

3ஜி சேவையைப் பொருத்த வரை ரூ.295 முதல் திட்டங்களின் விலை துவங்குகின்றது. இதில் ரூ.295 டாக்டைம், 3ஜிபி 3ஜி டேட்டா, நிமிடத்திற்கு 25 பைசா என்ற அழைப்புக் கட்டணம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Reliance Communication offers festive offers for existing and new prepaid customers Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்