ஆர்ஜியோ : ஒவ்வொரு சலுகையிலும் 25% அதிக டேட்டா பெறுவது எப்படி..?

Written By:

ரிலையன்ஸ் ஜியோ சேவையானது வணிக ரீதியாக செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. ரிலையன்ஸ் சேவைகள் தான் நாட்டின் மிகவும் மலிவான டேட்டா சலுகைகள் என்பது ஒருபக்கமிருக்க, மறுபக்கம் ஒவ்வொரு சலுகைகளிலும் கூடுதலாக 25 சதவீத தரவு பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா.?

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் படி, செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரையிலாக சேவை பெறும் பயனர்கள் வரம்பற்ற மற்றும் இலவச தரவு, குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை அனுபவிக்க முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சிறப்பு சலுகை :

அசத்தலான சலுகைகளுக்கு மத்தியில் ரிலையன்ஸ் நிறுவனம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வளமான வாய்ப்பை கொண்டு வரும் நோக்கத்தில் சிறப்பு சலுகை ஒன்றை வழங்குகிறது.

மாணவர் அடையாள அட்டை :

அதாவது சரியான மாணவர் அடையாள அட்டை வழங்கும் பயனர்கள் அனைவரும் ஒவ்வொரு கட்டண திட்டத்தின் மீதும் 25 சதவீத கூடுதல் தரவை பெற முடியும்.

விவரங்கள் :

அவைகள் என்னென்ன கட்டண திட்டங்கள், அத்திட்டங்கள் மூலம் கிடைக்கப்பெறும் சலுகைகள் என்னென்ன என்ற விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

திட்டம் ரூ. 149 :

இந்த திட்டம் மூலம் ரிலையன்ஸ் இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால்களை நிகழ்த்தலாம், உடன் வழங்கப்படும் 0.3 ஜிபி டேட்டா 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். இத்துடன் 100 இலவச உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ்களும் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.

திட்டம் ரூ.499 :

இந்த திட்டத்தில் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 4 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 8 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.999 :

இந்த கட்டண திட்டம் படி, ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 10 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 20 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.1499 :

இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 20 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 40 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.2499 :

இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 35 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 70 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.3999 :

இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 60 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 120 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.4999 :

இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 75 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 150 ஜிபி தரவு வழங்கப்படும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Reliacne Jio: Here's How You Can Get 25% More Data with Every Tariff Plan. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்