ஜியோவை சமாளிக்கச் 'சீன் ஐடியா' : அதிரடி வியூகம் வகுக்கும் ஐடியா.!!

டெலிகாம் சந்தையில் நிலைத்து நிற்க தடாலடி முடிவுகள் மிகிவும் முக்கியம் என்ற ரீதியில் புதிய திட்டத்துடன் களமிறங்க ஐடியா நிறுவனம் தயாராகி வருகிறது.

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ வரவு டெலிகாம் சந்தையைக் கதிகலங்க செய்தது. ஜியோ சேவைகளைத் தாக்குப்பிடித்துப் பயனர்களைத் தங்கள் வசம் வைத்திருக்கப் போட்டி நிறுவனங்கள் சேவைகளை மாற்றியமைத்தன.

விலை குறைப்பு, புதிய சேவை அறிமுகம் எனப் பயனர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தின. இன்னும் ஓயாத இந்தப் போட்டி சூழலில் ஐடியா நிறுவனம் தடாலடி ஐடியாவுடன் களமிறங்க இருக்கிறது.

ஜியோவுடனான போட்டியைச் சமாளிக்க ஐடியா எடுத்திருக்கும் தடாலடி ஐடியா தான் என்ன, இங்குப் பாருங்கள்..

4ஜி சேவை நீட்டிப்பு

4ஜி சேவை நீட்டிப்பு

டெலிகாம் நிறுவனமான ஐடியா இந்தியாவில் 4ஜி சேவைகளை நீட்டிக்கும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 2016-2017 ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுக்கச் சுமார் 20 வட்டாரங்களில் 4ஜி சேவைகளை வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கூடுதல் வட்டங்கள்

கூடுதல் வட்டங்கள்

இந்தியாவின் ஒன்பது வட்டாரங்களில் சுமார் 57,000 கூடுதல் இடங்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யவும், பேன்-இந்தியா அளவிலான வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைகளை வழங்க ஐடியா திட்டமிட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்பெக்ட்ரம்

ஸ்பெக்ட்ரம்

சமீபத்தில் ஐடியா கைப்பற்றிய ஸ்பெக்ட்ரம் கொண்டு உத்திர பிரதேசத்தின் மேற்கு, கிழக்குப் பகுதிகள், குஜராத், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் ஐடியா நிறுவனம் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான பணிகள் 2017 நிதியாண்டில் நிறைவு பெறும் என அந்நிறுவன செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட மதிப்பு

திட்ட மதிப்பு

ஆதித்யா பிர்லா குழும நிறுவனமானது ரூ.7,500 - ரூ.8,000 கோடி வரை புதிய திட்டத்திற்குச் செலவிட இருக்கிறது. இந்நிறுவனம் கூடுதலாக ரூ.13,000 கோடிகளை ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்குச் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஐடியா நெட்வர்க்

ஐடியா நெட்வர்க்

ஐடியா நெட்வர்க் தற்சமயம் வரை இந்தியா முழுக்கச் சுமார் 17 வட்டாரங்களில் கிட்டத்தட்ட 880 மில்லியன் மக்கள் தொகை வரை சேவைகளை வழங்கி வருகிறது. ஐடியா நிறுவனத்தின் 94 சதவீத வருமானத்தை ஈட்டித்தரும் ஐடியா 4ஜி சேவைகள் 20 முக்கிய வட்டாரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என அந்நிறுவனத்தின் ஹிமான்ஷு கபானியா தெரிவித்துள்ளார்.

புதிய சேவைகள்

புதிய சேவைகள்

ஐடியா-பிரான்டெட் கேம்களை அடுத்த நிதியாண்டில் அறிமுகம் செய்ய ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்துடன் ஐடியா மூவிஸ், மியூசிக் சேவை உள்ளிட்டவற்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறதாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Relaince Jio competition Idea to expand its 4G services

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X