பிஞ்சுகளை காவு வாங்கும் ஸ்மார்ட்போன்கள்..!

By Meganathan
|

இது குழந்தைகள் நலன் சார்ந்த தொகுப்பு. ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறிய சாதனங்கள் பல விதங்களில் மக்களுக்கு ஆபத்தாகவே இருக்கின்றது.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ என்ன எதிர்பார்க்கலாம் ?

ஒரு வேலை ஸ்மார்ட்போன்கள் மக்களுக்கு நன்மையை விளைவித்தாலும், அதே நேரம் அதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களும் அதிகமாகவே இருக்கின்றது. இந்த பிரச்சனை பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக அபாயத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இனி சாத்தியமே..!?

அந்த வகையில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை ஏன் வழங்க கூடாது, அவ்வாறு வழங்குவது எவ்வாறான தீங்குகளை அவர்களுக்கு விளைவிக்கும் என்பனவற்றை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

உறவு

உறவு

குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை அளிப்பது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இருக்கும் உறவினை வெகுவாக பாதிக்கும். இந்த பழக்கம் தொடர்வது குழந்தையை தவறான முடிவுகளை எடுக்கவும் வழி வகுக்கும்.

சிந்தனை

சிந்தனை

எதுவும் எளிதாக கிடைப்பது மற்றும் அதிகளவிலான வீடியோ கேம்களை விளையாடுவது அவர்களின் சிந்தைனை அளவினை குறைக்க செய்யும்.

உறக்கம்

உறக்கம்

படுக்கை அறையில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது குழந்தைகளின் தூக்கத்தை குறைக்கும். அதிக நேரம் ஸ்மார்ட்போன் திரையை பார்க்கும் போது சரியாக தூக்கம் வராமல் போகும் வாய்ப்புகள் அதிகமே.

கற்றல்

கற்றல்

ஆன்லைன் மூலம் அதிக நேரம் சாட் செய்யும் போது குழந்தைகள் தவறான அனுகுமுறைகளுக்கு எளிமையாக அனுமதிக்கப்படுவர். இதற்கு காரணம் அதிவேகமாக பதில் அளிப்பது தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வளர்ச்சி

வளர்ச்சி

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் கவனம் சிதைவதோடு அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

அடிமை

அடிமை

ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிப்பதோடு நாளடைவில் அவர்களை அந்த கருவிக்கு அடிமையாக்கி விடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இண்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்.

உடல் பருமன்

உடல் பருமன்

ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் போது குழந்தைகள் பொதுவாக ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதால் அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும் அபாயமும் உள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது தானாக நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். அதவும் கேம் விளையாடும் போது ஆபத்து அதிகரிக்கவும் செய்யும்.

சண்டை

சண்டை

ஸ்மார்ட்போன்களில் சண்டை கேம்களை விளையாடும் போது சாதாரணமாக அவர்களுக்கு சண்டை போடும் எண்ணம் அதிகரிக்கின்றது. காலப்போக்கில் அவர்கள் சண்டையிடுவது நல்லது என்பது போன்ற மன நிலையை உருவாக்கி கொள்வர்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here the Reasons You Shouldn’t Hand A Smartphone to Your Children. This is interesting and you will like this. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X