இந்தியாவில் குறைவான இண்டர்நெட் சேவை இது தான் காரணம்.!!

By Aruna Saravanan
|

சமீபத்தில் இந்தியாவின் இண்டர்நெட் நிலையை முழுமையாக அக்மை டெக்னாலஜீஸ் எனும் நிறுவனம் விளக்கியுள்ளது. இதில் இண்டர்நெட் வேகத்தை பொருத்த வரை இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் தென் கொரியா 26.7 MBps என்ற நிலையில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் இந்த நிலைக்கு காரணமான 5 விஷயங்களை கூறுகின்றோம்.

தனியார் நிறுவனங்கள்

தனியார் நிறுவனங்கள்

கிராமபுறங்களில் பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்டிஎன்எல் (MTNL) நெட் பயன்பாட்டை வழங்கி கொண்டிருக்கும் போது ஏர்டெல் மற்றும் நெக்ஸ்ட்ரா ப்ராட்பேன்ட் போன்றவை மிகுதியான நகர்புற இடங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு வித தந்திரமான முறையை பின்பற்றுகின்றன - FUP அதாவது Fair Usage Policy. இதனால் அதிவேக நெட் பயன்பாட்டிற்காக மக்களிடம் இருந்து அதிகமான கட்டணத்தை வசூல் செய்வது. இதனால் இந்தியாவின் நெட் வேகமும் வளர்ச்சியும் குறைந்து விடும்.

தோல்வி

தோல்வி

மேலே குறிப்பிட்டதை போல எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நாட்டின் பின்தங்கிய இடங்களுக்கு செல்கின்றன. இவை சந்தையை நினைக்காமல் தன் பணியை மட்டும் செய்து கொண்டு இருக்கின்றது. இதை விடுத்து நெட் சேவை கொடுப்பது மட்டுமே என் கடமை என்று இல்லாமல் அதை மேலே மற்ற நாடுகளுக்கு இணையாக எப்படி செயல்படுத்துவது என்று சிந்தித்தாலே சாதித்து விட முடியும்.

தலையீடு

தலையீடு

பல நாடுகளுக்கு இடையே நெட் சார்ந்த தொடர்பை மேன்மைப்படுத்த உணர்ச்சிகரமான தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு மிக முக்கிய தேவை ப்ராட்பேன்ட் சேவைதான். முறையான டிஜிட்டல் பயன்பாடு மற்றும் முறையான உள்கட்டமைப்பு போன்றவை இருந்தால் இது சாத்தியம்தான். குறைவான நெட் வேகத்தை வைத்துகொண்டு டிஜிட்டல் இந்தியாவை எப்படி உருவாக்க முடியும் என்பதை மனதில் வைத்து அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

சிறந்த அமைப்பு

சிறந்த அமைப்பு

சமீபத்தில் குறைந்தப்பட்ச நெட் வேகத்தின் த்ரீஷோல்டு 2 MBPS என்று இந்தியா அறிவித்துள்ளது. இதற்கு பிஎஸ்என்எல் தான் முழு பொறுப்பு ஏற்றுகொள்ள வேண்டும். இதற்கு எண்கள் கிடைக்கின்றதே தவிர வேகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கென்று 10 மடங்கு ப்ராட்பேன்ட் வேகத்தை அதிகரிப்பதை விட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே போதும்.

விர்ச்சுவல் அரீனா

விர்ச்சுவல் அரீனா

இந்தியா உலகிலேயே சிறந்த விர்ச்சுவல் அரீனாவால் இணைக்கப்பட்ட நாடாக இருக்க ஆசை கொள்கின்றது என்றாலும் அதற்கான வேகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ப்ராட்காஸ்ட் வேகத்தை மட்டும் வைத்து இதை பெற முடியாது. உலகில் 198 நாடுகள் இருப்பதை மனதில் வைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.??

மொபைலில் இலவசமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது எப்படி.??

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Reasons why India has the slowest Internet Speed Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X