இது தான் நோக்கியாவின் வெற்றி பின்னணி.!!

Written By:

தற்சமயம் மொபைல் போன் சந்தையில் இல்லை என்றாலும் அனைவராலும் என்றும் மறக்க முடியாத அனுபவத்தை நோக்கியா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. உலகின் முதல் மொபைல் போன் பிரான்ட் மற்றும் இந்தியாவின் முன்னணி நிறுவனம் என மொபைல் போன் வர்த்தகத்தில் கொடி கட்டி பறந்த நோக்கியா நிறுவன கருவிகளை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது.

கைகளில் கச்சிதமாக பொருந்தி, பார்க்க கவர்ச்சிகரமாகவும் இருந்த நோக்கியா கருவிகளை நாம் இன்றும் மறக்காமல் இருக்க காரணமாக அமைந்த நோக்கியாவின் வெற்றி பின்னணியை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பேட்டரி

நோக்கியா போன் பயன்படுத்திய நாட்களில் சார்ஜர் எங்கு இருக்கின்றது என்பதையே பல முறை மறந்திருப்போம், அந்தளவு நோக்கியா கருவிகளில் பேட்டரி பேக்கப் கிடைத்தது.

தரம்

எங்கிருந்து எந்த சூழ்நிலையில் கீழே விழுந்தாலும் எதுவும் ஆகாது அது தான் நோக்கியாவின் தனி சிறப்பு.

லோகோ

நோக்கியாவின் சின்னத்தை யாரும் மறக்கவே முடியாது. நோக்கியா சின்னத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது என கூறும் அளவு அந்த சின்னம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

ரிங்டோன்

நோக்கியா ரிங்டோன்கள் என்றாலே தனி மரியாதை என்றளவு அதன் ரிங்டோன் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.

பாம்பு

ஒரே ஒரு கேம் தான் என்றாலும் ஸ்னேக் விளையாட்டு அன்று அனைவருக்கும் பிடித்திருந்தது.

இசை

இதோடு நோக்கியா மொபைல்களில் மியூசிக் கம்போஸ் செய்யும் அம்சம் அன்று வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது.

சத்தம்

நோக்கியா ரிங்டோன்களை விட மற்ற ரிங்டோன் என்றாலும் நோக்கியாவின் சத்தம் அனைவரையும் அதிர வைக்கும் அளவு இருந்தது.

அளவு

பாக்கெட்டில் எளிதாக பொருந்துவதோடு விலையும் குறைவாகவே இருந்தது.

டைப்பிங்

அன்று குருந்தகவல் அனுப்புவதில் பந்தயமே நடந்தது. நோக்கியா கீபோர்டு மூலம் மின்னல் வேகத்தில் டைப் செய்ய முடிந்தது.

படம்

இன்று எமோஜி, ஸ்மைலி மற்றும் ஸ்டிக்கர்கள் இருக்கின்றது, ஆனால் இவைகளுக்கு அடித்தளமாக இருந்தது தான் பிக்சர் மெசேஜ்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Reason for Nokia's Success Revealed Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்