சார்ஜரின் பின் மர்ம குறியீடுகள் : அர்த்தம் என்ன?

Written By:

மொபைல் போன் பயன்பாடு பல காலமாக இருந்து வருகின்றது. ஆனால் அவற்றின் சாதாரண பயன்பாடுகளைக் கடந்து வேறு எதற்காகவும் அதனை நம்மில் பலரும் பயன்படுத்துவதில்லை. ஏன் அதில் என்னென்ன இருக்கின்றது என்றும் யாரும் கண்டு கொள்வதில்லை. மொபைல் போனில் இருக்கும் சிக்னல் குறியீட்டு அளவு முதல் பேட்டரி இருப்பு குறித்த குறியீடு வரை எல்லாவற்றிற்கும் நமக்குத் தெரியாத அர்த்தங்கள் இருக்கின்றது.

அப்படியாக ஸ்மார்ட்போன் சார்ஜர்களின் பின் இருக்கும் குறியீடுகளுக்கும் அர்த்தங்கள் இருக்கின்றது. நம்மில் எத்தனைப் பேர் சார்ஜர்களின் பின் இருக்கும் குறியீடுகள் இருப்பது தெரியும்? இந்தக் குறியீடுகளை இதுவரை கவனிக்காதவர்கள் ஒரு முறை அதனைப் பார்த்து அதற்கான அர்த்தம் என்னவென்று இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

CE குறியீடு:

சார்ஜரின் பின் இருக்கும் CE எனும் குறியீடு பேட்டரி தயாரிப்பவர் வழங்கும் உத்திரவாதம் ஆகும். அதாவது சந்தை விதிமுறைகளின் படி தயாரிக்க அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யும். இதில் எளிமையாகக் கையாளுவது, விற்பனைக்குத் தகுந்த நிலையில் கரவி பாதுகாப்பாக இருக்கின்றது என்பதை உணர்த்தும்.

குப்பைத் தொட்டி:

குப்பைத் தொட்டி குறியீடு சார்ஜரை பயன்படுத்தும் நமக்கான அறிவிப்பு ஆகும். அதாவது சார்ஜர் கருவிகளை மற்ற குப்பைகளுடன் வீசக் கூடாது என்பதைக் குறிக்கும். மின்சாதன கழிவுகள் பயன்பாடு முடிந்ததும் அவை மறுசுழற்சி செய்ய வேண்டும். நேரடியாக குப்பைத் தொட்டியில் வீசுவதைத் தவிர்த்து அதனை மறு சுழற்சி செய்ய வேண்டும் என்பதை இந்தக் குறியீடு உணர்த்துகின்றது.

வீடு:

சார்ஜரில் இருக்கும் வீடு குறியீடு சார்ஜர் தனை வீட்டில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கும். பொதுவாக வீட்டில் இருக்கும் வெப்பநிலையை மட்டும் தாங்கும் திறன் கொண்ட சார்ஜர் கருவிகளில் இந்தக் குறியீடுகள் இடம் பெற்றிருக்கும். அப்படியானால் சார்ஜர் தொழில்துறை இடங்களில் பயன்படுத்த கூடாது.

சதுரங்கம்:

இரட்டைச் சதுரங்கம் இருப்பதற்கான அர்த்தம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த சார்ஜர் இரு முறை காப்பிடப்பட்டுள்ளதை உணர்த்துகின்றது. மின்சாதன பொருட்களை காப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சின்னம்:

சார்ஜரில் இருக்கும் PCT சின்னம் இந்தக் கருவியானது ரஷ்யா தரத்திற்கான சான்று பெற்றிருப்பதை உணர்த்தும். இது GOST R தரச் சான்று என தயாரிப்பு சந்தையில் அழைக்கப்படுகின்றது. GOST R என்பது ஆசிய-ஐரோப்பிய சபையின் விதிமுறைகளுக்கு உட்பட்ட தரச்சான்றிதழ் பெறுவதாகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Real Reason Behind The Signs On Our Mobile Charger Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்