லீக் தகவல்கள் : ஹூவாய் மேட் 9 ப்ரோவில் டுவுல்-கர்வுடு டிஸ்ப்ளே.?!

சமீபத்தில் ஹுவாய் அதன் மேட் 9 கருவியை இரண்டு வகைகளில் வெளியிட்டது. அக்கருவியின் ப்ரோ வெர்ஷன் ஆன்லைன் லீக்கில் இப்போது சிக்கியுள்ளது.

Written By:

ஹூவாய் நிறுவனம், ஒரு சில வாரங்களுக்கு முன்பு சீனாவில் அதன் மேட் 9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. மற்றும் அந்த கருவியானது ஒரு சாதாரண டிஸ்ப்ளே மற்றும் ஒரு வளைந்த டிஸ்ப்ளே என இரண்டு வேறுபாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை 'போர்ஸ்' வடிவமைப்பு என்று ஹூவாய் அறிவித்தது.

நேற்று, இக்கருவியின் ப்ரோ வெர்ஷன் சார்ந்த லீக் தகவல்கள் ஆன்லைனில் வெளியாகியது. வெளியான லீக் தகவல் உண்மையெனில் அந்த ஹூவாய் ஹவாய் ஸ்மார்ட்போன் ஆனது பிரத்தியேகமான டுவுல்-கர்வுடு டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சாம்சங் போல

வெளியான படங்கள் அக்கருவி தெளிவாக மிகவும் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியை ஒத்திருக்கிறது மற்றும் அது காம்பைன் கோல்ட் நிற மாறுபாட்டில் உள்ளதையும் காட்டுகிறது.

கேமிரா

ஹூவாய் மேட் 9 ப்ரோ கருவியானது அதன் முந்தைய மேட் 9 கருவியை போன்றே 20 எம்பி பின்பக்க மற்றும் 12 எம்பி முன்பக்க கேமிரா கொண்டுள்ளது உடன் ஓஐஎஸ் மற்றும் 2xஜூம் திறன்களும் கொண்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

ஹூவாய் அதன் தொலைபேசியில் முன்பக்கத்தில் கைரேகை ஸ்கேனர் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது அதை வெளியான லீக் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளது போல் தெரிகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டுவுல்-கர்வுடு டிஸ்ப்ளே

ஹூவாய் மேட் 9 ப்ரோவில் அதே 5.9 அங்குல 1080பி டிஸ்ப்ளே இடம்பெறும் ஆனால், ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் 9 ப்ரோ கருவியில் ஒரு டுவுல்-கர்வுடு டிஸ்ப்ளே உள்ளது.

விலை

இக்கருவியின் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வேறுபாடு சுமார் ரூ.42,300/-க்கும், 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு சுமார் ரூ 52,300/-கும், 6ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு வேறுபாடுசுமார் ரூ.. 56,500/-க்கும் விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Real Life Images of Huawei Mate 9 Pro Leak Online: Dual-Curved Display Revealed. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்