ஆர்காம் அதிரடி : ரூ.9/-க்கு 1ஜிபி டேட்டா, ஆக்டிவேட் செய்வது எப்படி.?

கவர்ச்சிகரமான கட்டண திட்டங்களை அறிமுகம் செய்த ஆர்காம் நிறுவனம் இப்போது மிக மலிவான இண்டர்நெட் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

Written By:

புதிதாக சந்தைக்குள் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டி முனைப்பில் மற்ற தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்கள் மலிவான தரவு, வரம்பற்ற குரல் அழைப்பு திட்டங்கள் மற்றும் இன்னும் உட்பட பல கவர்ச்சிகரமான கட்டண திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அந்த போட்டியில் ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் சரியான போட்டியை வழங்கி கொண்டுதான் இருக்கிறது என்றே கூறலாம்.

அற்புதமான தரவு திட்டங்கள், சர்வதேச அழைப்புகள் அல்லது வரம்பற்ற குரல் அழைப்புகள் என ஆர்காம் ரிலைஸ்ன் ஜியோவிற்கு எதிராக வெளியிடாதா சலுகைகளே இல்லை எனலாம். அப்படியாக இண்டர்நெட் பேக் மூலமாக மிகவும் கடினமான ஒரு போட்டியை உண்டாக்கும் முனைப்பில் ஆர்காம் நிறுவனம் மிகவும் மலிவான விலையில் அதாவது ரூ.9/-க்கு இண்டர்நெட் பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் முழு விவரங்கள் மற்றும் ரூ.9/-க்கு ஆர்காம் வழங்கும் 1ஜிபி டேட்டாவை பெறுவது எப்படி.? அதாவது இந்த பேக்கை ஆக்டிவேட் செய்வது எப்படி.? என்பதை பற்றிய தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டயல் செய்யவும்

உங்கள் ஆர்காம் எண்ணில் இந்த வாய்ப்பை பெற, பயனர் முதலில் தங்கள் போனில் *129# என்ற எண்ணை டயல் செய்யவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப்ஷன் ரூ.9/-

உங்கள் ரிலையன்ஸ் எண்ணிலிருந்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணை டயல் செய்த பின்னர், நீங்கள் உங்கள் எண்ணுக்கு கிடைக்கின்ற சலுகைகளின் பட்டியலை பார்ப்பீர்கள். அதில் இரண்டாவதாக இருக்கும் ஆப்ஷன் ரூ.9/-ஐ தேர்வு செய்யவும்.

தேர்வை நிகழ்த்த வேண்டும்

அந்த தேர்வை செய்தலின் மூலம், நீங்கள் மற்றொரு பட்டியலை அடைய நேரிடும் அங்கு நீங்கள் 'ரூ.9 = 1ஜிபி 2ஜி' என்ற தேர்வை நிகழ்த்த வேண்டும் பின்னர் குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்கள் எண்ணை டைப் செய்து 'சென்ட்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

உறுதி

உங்கள் மெயின் பேலன்ஸில் போதுமான பணம் உள்ளதா என்பதை சோதித்துக்கொள்ளவும் பேக் ஆக்டிவேட் செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் உங்கள் பேலன்ஸில் இருந்து ரூ.9/- உடனடியாக கழித்துக்கொள்ளப்படும். உடன் நீங்கள் ஆப்ரேட்டரிடம் இருந்து ஒரு உறுதிப்படுத்தல் டெக்ஸ்ட் செய்தியையும் பெறுவீர்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வரம்புகள்

#1 ஆர்காம் 2ஜி பயனர்களுக்கு மட்டுமே
#2 இப்போது வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே
#3 ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்
#4 ஆர்காம் ப்ரீபெயிட் பயனர்களுக்கு மட்டுமே

மேலும் படிக்க

ரூ.151/-ல் அதிரடி : ஆர்காம் நிறுவனத்தின் 'பெஸ்ட் ரீசார்ஜ்' இதுதான்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
RComm Introduces Cheapest Internet Plan, Offers 1GB Data At Just Rs. 9: Here's How to Activate it. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்