மாதம் முழுக்க அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதிரடி.!

ஜியோவிற்குப் போட்டியாக ஜியோ வழங்கியதைப் போன்ற திட்டம் ஒன்றை ஆர்காம் அறிவித்துள்ளது.

Written By:

ஜியோ அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி வரும் நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் இது போன்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தார்பில் புதிய பக்கெட் பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2ஜி பயனர்களைக் குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அன்லிமிட்டெட்

'149 அன்லிமிட்டெட்' திட்டத்தில் பயனர்கள் அனைத்து நெட்வர்க்களுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதில் நாடு முழுக்க அனைத்து மாநிலங்களுக்கான எஸ்டிடி அழைப்புகளும் அடங்கும். இந்தத் திட்டத்திற்கான கட்டணம் ரூ.149/- ஆகும்.

ஜியோ திட்டம்

இது கிட்டதட்ட ஜிடோ பிளான் போன்று இருந்தாலும், இதனை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த முடியும். அப்படியெனில் 2ஜி, 3ஜி அல்லது 4ஜி என அனைத்து மொபைல்களிலும் இந்தச் சேவை கிடைக்கும், ஜியோவை பொருத்த வரை 4ஜி வோல்ட்இ கருவிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாடிக்கையாளர்

2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களில் கிடைக்கும் 149 அன்லிமிட்டெட் பிளான் மூலம், அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களையும் ஆர்காம் சேவைக்குக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேட்டா

இந்தியாவில் பெரும்பாலான பயனர்கள் இன்றும் பழைய 2ஜி கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களைக் குறிவைத்து ஆர்காம் புதிய அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எம்பி டேட்டாவினை வழங்குகிறது.

மொபைல் போன்

புதிய திட்டத்தின் மூலம் பீச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன் என அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையைப் பெற முடியும், இதில் எஸ்டிடி அழைப்புகளும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
RCom unveils bucket plan offering unlimited voice calls
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்