ஜியோவின் ரூ.303, ரூ.509/-க்கு போட்டியாக ஆர்.காம்-ன் ரூ.333, ரூ.499/- பேக்ஸ்.!

இந்த புதிய ஆர்காம் திட்டங்கள் டெல்லி, மும்பை, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசங்களில் உள்ள 4ஜி பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.

|

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இதர நிறுவனங்கள் அனைத்தையும் எதிர்கொள்ளும் முனைப்பில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதன் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுத்த பட்ஜெட் திட்டங்களில் 28 சதவீத தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

இந்த புதிய ஆர்காம் திட்டங்கள் டெல்லி, மும்பை, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசங்களில் உள்ள 4ஜி பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் பற்றிய மேலும் பல விரிவான தகவல்களை கீழே காண்போம்.

ரூ.11/-க்கு 1ஜிபி

ரூ.11/-க்கு 1ஜிபி

இந்த புதிய வாய்ப்புகள் ஆனது லையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போஸ்ட்பெயிட் நுகர்வோர்களுக்கு ரூ.11/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவுகளை வழங்கும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த தள்ளுபடிகள் ஆனது ஆர்காம் திட்டங்களுக்கான நிறுவனத்தின் போர்டல் ஆர்காம்- இஷாப்.காம் (rcom-eshop.com) மூலம் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.333/- மற்றும் ரூ.499/-

ரூ.333/- மற்றும் ரூ.499/-

தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் மாதாந்திரத் திட்டங்களின்கீழ் வழங்கப்படுகிறது, தள்ளுபடிக்குப் பின்னர் இந்த திட்டங்கள் தற்போது ரூ.333/- மற்றும் ரூ.499/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. இந்த தள்ளுபடி விகிதம் சந்தாதாரர்களுக்கு 12 மாதங்களுக்கு அதாவது ஆண்டுக்கு ரூ.2,400/- என்ற கட்டண தள்ளுப்படியின் கீழ் சேவைகள் வழங்கப்படும்.

30ஜிபி அளவிலான டேட்டா

30ஜிபி அளவிலான டேட்டா

ரூ.499/- திட்டமானது ரிலையன்ஸ் ஜியோவன் ரூ.509/- திட்டதிற்கு நேரடி சவாலாக வெளியாகியுள்ளது. இது 4ஜி / 3ஜி / 2ஜி பயனர்களுக்கு 30ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஹோம் வட்டத்தில் உள்ள எந்த வலையமைப்பிற்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், இலவச 3000 எஸ்எம்எஸ், மற்றும் இலவச உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகளையும் இந்த திட்டம் வழங்குகிறது.

ஒப்பிடுகையில்

ஒப்பிடுகையில்

இலவச எஸ்எம்எஸ் தனை பொறுத்தமட்டில் தொப்பி வரம்பை மீறிய பிறகு ஒரு எஸ்எம்எஸ்-க்கு 25 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். ஒப்பிடுகையில், ரிலையன்ஸ் ஜியோ திட்டம் 56ஜிபி தரவு வழங்குகிறது, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகள் சந்தா, மற்றும் அனைத்து உள்ளூர் நெட்வொர்க்குகள் இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது.

30ஜிபி அளவிலான 4ஜி தரவு

30ஜிபி அளவிலான 4ஜி தரவு

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வலனாகும் மற்றோடு திட்டமான ரூ.333/- ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.309/- திட்டத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளது. இந்த திட்டம் 30ஜிபி அளவிலான 4ஜி தரவு, 100 இலவச எஸ்எம்எஸ், இலவச உள்வரும் அழைப்புகள் ரோமிங் மற்றும் 1000 நிமிடங்கள் வெளிச்செல்லும் உள்ளூர் மற்றும் எல்.டி.டி அழைப்புகளை இலவசமாக வழங்குகிறது.

ரூ.16.66/-க்கும்,  ரூ.11.1/-க்கும்

ரூ.16.66/-க்கும், ரூ.11.1/-க்கும்

வெளியேறும் ரோமிங் அழைப்புகள் 50 பைசா / நிமிடத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.499/- திட்டம் 1ஜிபி தரவை குறைந்த விலையில் அதாவது ரூ.16.66/-க்கும், ரூ.333/- திட்டம் 1ஜிபி தரவை ரூ.11.1/-க்கும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில், ரிலையன்ஸ் ஜியோ 28ஜிபி தரவையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜியோ பயன்பாடுகள் சந்தா, மற்றும் அனைத்து உள்ளூர் நெட்வொர்க்குகள் இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
RCom Offers 28 Percent Discount on Select Postpaid Plans for One Year. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X