ரூ.1/-க்கு 300 நிமிடங்கள் ஆப்-டு-ஆப் கால், ரிலையன்ஸின் அடுத்த அதிரடி..!

Written By:

நீங்கள் கால் ட்ராப்களில் சிக்கி தொல்லை க்ளுக்கு உள்ளாகி கொண்டிருப்பவர் என்றால் இதோ உங்களுக்கான ஒரு நல்ல செய்தியாக இது இருக்கும். இந்தியாவின் முக்கியமான டெலிகாம் சேவைகளில் ஒன்றான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 'கால் ட்ராப்ஸ் கே சுட்கரா' (Call drops se chutkara) என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

அதாவது ரூ.1/-க்கு 300 நிமிடங்கள் ஆப்-டு-ஆப் கால் என்ற தனது அடுத்த அதிரடி சலுகையை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆப்-டு-ஆப் அழைப்பு :

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ப்ரீபெயிட் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1/- என்ற அறிமுக விலையில் 300 நிமிடங்களுக்கான ஆப்-டு-ஆப் அழைப்புகளை நிகழ்த்தலாம்.

அடிப்படை :

இந்த டேட்டா அடிப்படையிலான அழைப்புகள் ஆனது 850 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் பேண்ட் பயன்படுத்தி கையாளப்பட இருக்கிறது.

7 எம்பி டேட்டா :

இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 7 எம்பி டேட்டா வழங்கப்படும் அதாவது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 10 நிமிட ஆப்-டு-ஆப் அழைப்புகளை நிகழ்த்தப்போதுமான தரவு.

ப்ரவுஸிங் :

வழங்கப்படும் டேட்டாவை ப்ரவுஸிங் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளாலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலாவதி :

எனினும், கொடுக்கப்பட்ட 7 எம்பி டேட்டா என்ற அளவில் பயன்படுத்தப்படாத டேட்டாவானது அந்த நாள் இறுதியில் காலாவதியாகி விடும்.

ஆப்ஸ்கள் :

இந்த புதிய திட்டத்தின் கீழ் இன்ஸ்டன்ட் மெஸேஜ் மற்றும் வாட்ஸ்ஆப், வைபர், கூகுள் ஹாங்அவுட்ஸ், ஸ்கைப் போன்ற காலிங் ஆப்ஸ்கள் மிகப்பிரபலமாக்கப்படும் என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நம்புகிறது.

படிப்படியாக :

இந்த சேவையானது ஏற்கனவே குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது இப்போது படிப்படியாக அதன் சுற்று வட்டங்களில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒப்பந்தம் :

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த திட்டம் சார்ந்த இணைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கையெழுத்தாகும் :

"இரண்டு நிறுவனங்களுக்கு (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல்) இடையிலேயான சொற்கூறு படிவங்கள் தயாராகிவிட்டன. இந்த இணைப்பு ஒப்பந்தம் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்ரேட்டர் :

இந்த ஒப்பந்தம் வெற்றியடைந்தால்196 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்ட நாட்டின் மூன்றாவது பெரிய தொலை தொடர்பு ஆப்ரேட்டர் உருவாக்கத்திற்கு வழிவகுக்கப்படும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
RCom offering 300 minutes of app-to-app calls for just Re 1. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்