ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிவித்துள்ள புதிய டேட்டா ஆபர் என்ன?

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 28 சதவிகித தள்ளுபடிகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.!

By Prakash
|

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், இது தற்போதைய இந்திய டெலிகாம் சந்தையை ஆதரிக்காததால் மிகுந்த வருவாய் இழந்துள்ளது. தற்போது இந்நிறுவனம் 28 சதவிகித தள்ளுபடிகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சலுகைகள் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிவித்துள்ள புதிய டேட்டா ஆபர் என்ன?

ஆர்.காம்-என்ற இணையத்தளம் வழியாக ஆன்லைன் திட்டங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பயனர்களுக்கு 28 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் 4ஜி வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை எனக் கூறப்படுகிறது.

இந்த ஆபர் பொறுத்தமட்டில் தில்லி, மும்பை, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச வட்டாரங்களில் இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த சலுகை மூன்று பட்ஜெட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் அவை ரூ. 499, ரூ. 399, மற்றும் ரூ. 249 முறையே. ஒரு வருடத்திற்கு தள்ளுபடி விகிதங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூபாய்.499 திட்டம் பொருத்தவரை 30ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்கும் வரம்பற்ற கால் அழைப்புகள், 3000 எஸ்எம்எஸ் போன்றவை இத்திட்டத்தின் கீழ் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 399 திட்டம் பொருத்தவரை 15ஜிபி 4ஜிடேட்டா மற்றும் மற்றும் இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்கும் வரம்பற்ற கால் அழைப்புகள், உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகள், 3000 எஸ்எம்எஸ் போன்றவை இத்திட்டத்தின் கீழ் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 249 திட்டம் பொறுத்தமட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
RCom Offering 1GB of Data at Just Rs. 16.66 With its Postpaid Plans in 4G Circles : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X