ஆர்.காம் அதிரடி : லேண்ட்லைனில் ஆண்ட்ராய்டு, 4ஜி, விரைவில் ஹோம் போன்.!

ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் ஆண்ட்ராய்டு 4ஜி வோல்ட் வயர்லெஸ் போனை பல வகையான திட்ட சலுகைகளுடன் அறிமுகம் செய்கிறது.

|

கடந்த இரண்டு மாதங்களாக ரிலையன்ஸ் ஜியோ பெறாதா தலைப்பு செய்திகளே இல்லை எனலாம் இப்போது அந்த இடத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நிரப்ப இருக்கிறது. அதாவது, 4ஜி வோல்ட் சார்ந்த ஹோம் தொலைபேசி ஒன்றை தொடங்கும் நோக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் வெளியிடப்படும் முதல் 4ஜி வோல்ட் ஹோம் தொலைபேசி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் இந்த சாதனம் ஒரு வழக்கமான தரைவழி (லேண்ட்லைன்) தொலைபேசிறே தான் இருக்கும் ஆனால் இது அண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையாக கொண்டு இயங்கும். இந்த ஹோம் தொலைபேசியில் பல நம்பிக்கைக்குரிய அம்சங்கள் உள்ளன.

தரம் உயர்த்தபட்டது

தரம் உயர்த்தபட்டது

குறிப்பிடத்தக்க வண்ணம், சமீபத்தில் ஆர்.காம் நிறுவனம் தனது சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களை, எப்டபுள்யூபி சார்ந்த சிடிஎம்ஏ பயனர்கள் உட்பட அனைவரையும் 4ஜிக்கு மாற்றியது. உடன், எப்டபுள்யூபி கருவி பயனர்களுக்கு ஜிஎஸ்எம் வழங்கியது. அதாவது அணைத்து வாடிக்கையாளர்களுக்கும் தரம் உயர்த்தபட்டது.

4ஜி மூலம் நெட்வொர்க்

4ஜி மூலம் நெட்வொர்க்

இந்த புதிய சாதனமானது ஒரு பாரம்பரிய தரைவழி தொலைபேசியை போன்றதே என்றாலும் அது வழக்கமான காப்பர் கம்பிகள் மூலம் இணைப்பை பெறாது 4ஜி மூலம் நெட்வொர்க் இணைப்பை பெறும். அதாவது இந்த சாதனத்தை நீங்கள் போகும் இடமெல்லாம் கொண்டு சென்று செயல்படுத்த முடியும்.

எல்டிஇ சிக்னல்

எல்டிஇ சிக்னல்

இந்த குறிப்பிட்ட கம்பியில்லா தொலைபேசியில் ஒரு இரட்டை செயல்பாடு ஆண்டெனா ஒன்றும் உள்ளது. இந்த ஆண்டெனா மூலம் எல்டிஇ சிக்னலை பெற முடியும், உடன் வைஃபை சிக்னல் வெளியிடுவதில்லை என்று அர்த்தம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

இரட்டை செயல்பாடு மூலம் செயலாக்கப்படும் ஆண்டெனா உதவியுடன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ல் இருந்து ஹோம்பு தொலைபேசியை ஒரே நேரத்தில் 5 சாதனங்களுடன்வரை இணைக்க முடியும்.

எச்டி தர குரல்  அழைப்பு

எச்டி தர குரல் அழைப்பு

ஆர்.காம் வழங்கும் இந்த கருவியானது 4ஜி வோல்ட் பயன்படுத்துவது மூலம் பயனர்கள் எச்டி தர குரல் அழைப்புகளை அனுபவிக்க முடியும்

3.5 இன்ச் டச் ஸ்க்ரீன்

3.5 இன்ச் டச் ஸ்க்ரீன்

மேலும், எஸ்எம்எஸ் பரிமாற்றம் மற்றும் ஸ்மார்ட்டிவிக்களில் யூட்யூப் காஸ்கேடிங்தனை ஹோம் போன் கொண்டுள்ள ஆண்ட்ராய்டு ஓஎஸ் பயன்படுத்தி நிகழ்த்திக்கொள்ள முடியம். இது 3.5 இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் ஆண்ட்ராய்டு 5.1 மூலம் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் - வெளியூர்

உள்ளூர் - வெளியூர்

4ஜி வோல்ட் மூலம் சேவையை நிகழ்த்தும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வயர்லெஸ் தொலைபேசியானது லேண்ட்லைன் அல்லது மொபைல் என உள்ளூர் - வெளியூர் பிணைய குரல்களுக்கு இலவச நிமிடங்கள் என பல சலுகை திட்டங்களையும் சேர்த்தே வெளியிடுகிறது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

38பைசா திட்டம்

38பைசா திட்டம்

உள்வரும் அழைப்புகள் மீதமுள்ள ரோமிங் இலவச நிமிடங்களும் உண்டு. உடன் பயனர்கள் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 40பைசா என்ற, எஸ்.டி.டி. எஸ்எம்எஸ், தேசிய ரோமிங் மற்றும் உள்ளூர் எஸ்எம்எஸ் ஆகியவைகளுக்கு ஒன்றிற்கு 38பைசா என்ற திட்டமும் கொண்டுள்ளது.

இரண்டு வகை திட்டங்களுடன்

இரண்டு வகை திட்டங்களுடன்

இந்த போன்கள் இரண்டு வகை திட்டங்களுடன் வெளியாகுகின்றன. ஒன்று 4ஜி ஸ்மார்ட் லைஃப் 299 மற்றும் 4ஜி ஸ்மார்ட் லைஃப் 499 என்ற இரண்டு மாதாந்திர திட்டங்களில் வெளியாகுகின்றது.

2ஜிபி மற்றும் 4ஜிபி

2ஜிபி மற்றும் 4ஜிபி

அதாவது வெளியாகும் ரூ.299/- மற்றும் ரூ.499/- என்ற இரண்டு திட்டங்களிலும் நாடு முழுவதும் 300 நிமிடங்களுக்கான குரல் அழைப்பு மற்றும் முறையே 2ஜிபி மற்றும் 4ஜிபி அளவிலான தரவு கிடைக்கப்பெறும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ கால் ட்ராப் சிக்கலில் நல்ல முன்னேற்றம், வேறென்ன முன்னேற்றங்கள்.?

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Communications Launches Android 4G VoLTE Fixed Wireless Phone with Bundled Data. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X