இவரின் முன்னால் சுந்தர் பிச்சை எல்லாம் குழந்தை மாதிரி.!

சென்னை லயோலா கல்லூரியில் இருந்து அமெரிக்காவின் செல்வந்த இந்தியன் வரை.!

By Gizbot Bureau
|

உடனே.. "எவன்டா அவன் நம்ம சுந்தர் பிச்சையை பற்றி தப்பா பேசுறது"னு வரிந்து கட்டிக்கொண்டு வராதீர்கள். உங்களை விட சுந்தர் பிச்சையை அதிகம் நேசிப்பவர்கள் நாங்கள் - "அவரை நம்பித்தான் (கூகுள் நியூஸ்) பொழப்பே ஓடுது": என்று கூட வெளிப்படையாக கூறலாம்.!

ஆனால், ஏனோ தெரியவில்லை சுந்தர் பிச்சை அளவிற்கு அமெரிக்காவை கலக்கும் பிற தமிழர்கள் பற்றிய விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. நிதர்சனம் என்னவென்றால் சுந்தர் பிச்சை மட்டுமின்றி, சுந்தர் பிச்சைக்கு முன்பே அமரிக்காவை கலக்கிய தமிழர் ஒருவர் இருக்கிறார் - அவர்தான் ஸ்ரீராம் ராம்.,!

<strong>உணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்.!</strong>உணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்.!

இவர் யார்.?? கூகுள் நிறுவனத்திற்கும் இவருக்கும் என்ன தொடர்பு.? அப்படி என்ன சாதனைகளை இவர் புரிந்துள்ளார் என்பதை பற்றிய தொகுப்பே இது.

முதன்முதல் முதலீட்டாளர்

முதன்முதல் முதலீட்டாளர்

கவிதர்க் ராம் ஸ்ரீராம் உலகின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் குழு உறுப்பினர் ஆவார். அதுமட்டுமன்றி கூகுள் நிறுவனத்தின் முதன்முதல் முதலீட்டாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.

துணிகர மூலதனம்

துணிகர மூலதனம்

ஸ்ரீராம் ராம் அவர் தனது சொந்த முதலீட்டு நிறுவனமான ஷெர்பலோ வென்ச்சர்ஸ் நிறுவனத்தை 2000-ஆம் ஆண்டு நிறுவி இயக்கி வருகிறார். இந்நிறுவனம் புதிய தடைசெய்வதற்கான தொழில்நுட்பங்களை உறுதிப்படுத்தும் ஒரு துணிகர மூலதன நிறுவனமாக
இயங்கு வருகிறது.

ஹை-டெக் டீல் மேக்கர்

ஹை-டெக் டீல் மேக்கர்

2005-ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் அறிவித்த மூன்று ஹை-டெக் டீல் மேக்கர்களின் பெயர் பட்டியலில், உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக ஸ்ரீராம் பெயரும் நிறுவனமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சொத்து

சொத்து

மேலும் சமீபத்தில் போர்ப்ஸ் வெளியிட்ட "செல்வந்த இந்திய அமெரிக்கர்களின்' பட்டியலில் 1.6 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்பிலான சொத்துக்கள் பெற்று தனது பெயரை ஸ்ரீ ராம் பதிவு செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டையை மடித்து கொண்டு

சட்டையை மடித்து கொண்டு

"ஸ்ரீராம் எப்போதுமே தனது முழுக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு தனது குழுவோடு சேர்ந்து சவாலான பிரச்சினைகளையும், சிக்கல்களையும் ஆர்வமாக எதிர்கொள்ளும் வண்ணம் மிகவும் நெருக்கமாக பணியாற்றுவார்" என்று ஸ்ரீ ராம் பற்றி விளக்கமளிக்கிறது ரெடிஃப்.!

நெக்ஸ்ட் ஜம்ப்

நெக்ஸ்ட் ஜம்ப்

இதெல்லாம் மட்டுமின்றி ஸ்ரீராம் உலகளாவிய மொபைல் விளம்பர நெட்வொர்க் ஆன இன்மோபி (InMobi) நிறுவனத்தின் ஒரு முதலீட்டாளராவார். உடன் ஸ்டபிள்அபான், ஸாஸல், நெக்ஸ்ட் ஜம்ப், மீவியோ மற்றும் பேப்பர்லெஸ்போஸ்ட்.காம் ஆகிய நிறுவனங்களிலும் சேவை சேவை செய்கிறார்.

நவுக்ரி.காம்

நவுக்ரி.காம்

மேலும் இந்தியாவை மிகப்பெரிய வேலைதேடு வலைத்தளமான நவுக்ரி.காம் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றுகிறார்.

லயோலா

லயோலா

சென்னை லயோலா கல்லூரியின் அறிவியல் துறையிலிருந்து பட்டம் பெற்ற ஸ்ரீராம், மிச்சிகன் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய ரோஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் தந்து எம்பிஏ படத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசம் திரைப்படத்தின் ஷாருக்கானை போல மீண்டு இந்தியாவிற்கு வருவேன்: சுந்தர் பிச்சை உருக்கம்.!

தேசம் திரைப்படத்தின் ஷாருக்கானை போல மீண்டு இந்தியாவிற்கு வருவேன்: சுந்தர் பிச்சை உருக்கம்.!

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது முயற்சியால் கூகுள் நிறுவனம் சிறப்பாக இயங்கி வருகிறது. மேலும் இவரது கடந்த ஆண்டு சம்பளம் ரூ.1,285கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள்

கூகுள்

உலகின் மிக சக்தி வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் முன்னணி வகிப்பது பெருமையாக உள்ளது என தி கார்டியன் பத்திரிகையுடன் பேட்டியில், சுந்தர் பிச்சை தெரிவித்தார், மேலும் தி கார்டியன் பத்திரிகையில் அவர் கூறியது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்தாலும் ஒருநாள் ஸ்வதேஸ்(தேசம்) திரைப்படத்தின் ஷாருக்கானை போல மீண்டும் இந்தியாவிற்கு வருவேன் என கூறினார்

மதுரை

மதுரை

தமிழ் நாட்டில் மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது பெற்றோர் லட்சுமி மற்றும் ரகுநாத பிச்சை. இவர் சென்னையில் சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார் பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம். எஸ்(Material Sciences and Engineering) பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

தற்சமயம் கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன், ஹெட்செட், ரூட்டர் உள்ளிட்ட சில சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

பிச்சை சுந்தர்ராஜன்

பிச்சை சுந்தர்ராஜன்

இவரின் முழு பெயர் பிச்சை சுந்தர்ராஜன் ஆனாலும் இவர் சுந்தர் பிச்சை என்றே அறியப்படுகின்றார். ஒரு மூத்த மின் பொறியாளரான சுந்தர் பிச்சையின் தந்தை, தனது குடும்பத்திற்காக ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க மூன்று ஆண்டுகள் பணம் சேர்த்தாராம் இருப்பினும் சுந்தர் பிச்சை மற்றும் அவரது சகோதரர்கள் சிறப்பான கல்வியை வழங்க தவறியதில்லையாம்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவை இப்போது பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது என தி கார்டியன் பத்திரிகையில் பேட்டியில், சுந்தர் பிச்சை தெரிவித்தார். மேலும் இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் மக்களுக்கு கண்டிப்பாக உதவும் எனத் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்ப பயன்பாடுகளில் மக்கள் ஆர்வமாக இருப்பதை நான் உணர்கிறேன்," என்று அவர் பிரிட்டிஷ் செய்தித்தாளில் கூறினார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Ram Shriram one of the first investors in Google. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X