டெக் தலைவலி வேண்டாம், இதை தெரிந்து கொள்ளுங்கள்.!!

Written By:

தொழில்நுட்ப உதவி இல்லாமல் அன்றாட பணிகளை செய்வது கடினமாகி வருகின்ற நிலையில் அனைவருக்கும் இந்த தொகுப்பு சமர்பனம். ஒழுங்காய் வேலை செய்யும் டெக் சாதனங்களை சர்வ சாதரணமாக பயன்படுத்தி வரும் பெரும்பாலானோரும் அதில் சிறிய கோளாறு ஏற்ப்பட்டாலும் வாடி வதங்குகின்றனர்.

இனி அவ்வாறு கவலை கொள்ள வேண்டாம், அன்றாடம் பயன்படுத்தும் டெக் கருவிகளில் ஏற்படும் கோளாறுகளை எளிய முறையில் சிறப்பாகவும், குறைந்த செலவில் எதிர்கொள்வது எப்படி என்பதை பார்ப்போமா.??

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கீபோர்டு

கணினியுடன் பயன்படுத்தும் கீபோர்டினை மிகவும் எளிமையாக சுத்தம் செய்ய ஸ்டிக்கி நோட் பேப்பர்களை பயன்படுத்தலாம்.

கீறல்

ஸ்மார்ட்போனில் கீறல் ஏற்ப்பட்டால் திரையில் வெள்ளை நிற பற்பசையை வைத்து வட்ட வடிவில் மென்மையாக துடைக்கலாம்.

நீர்

ஸ்மார்ட்போன் நீரில் விழுந்தாலோ, மழையில் நனைந்தாலோ உடனடியாக அதனினை கழற்றி சிறிது நேரம் காய வைத்து அதன் பின் சில மணி நேரங்கள் அரிசியில் புதைத்து வைக்கலாம்.

பவர் பேங்க்

ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்து நேரத்தில் சக்தியூட்டும் பவர் பேங்க் கருவிகளை முழுமையாக சார்ஜ் செய்து, முழுமையாக காலியாகும் வரை பயன்படுத்த வேண்டும். மாதம் ஒரு முறை இவ்வாறு செய்தால் பவர் பேங்க் கருவியில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

இயர்போன்

இயர்போன்களை சிக்கு ஆகாமல் இருக்க அவைகளை உள்ளங்கையில் வைத்து எட்டு வடிவில் மடித்து பின் அதனினை முடிச்சு போட்டு கொள்ளலாம்.

கேமரா

டிஎஸ்எல்ஆர் கேமராவினை ஈரப்பதமாகாமல் காக்க கேமரா கேஸில் சிலிகா ஜெல் பாக்கெட்களை வைக்கலாம்.

லேப்டாப்

லேப்டாப் சூடாகாமல் இருக்க அதனினை முட்டை வைக்கும் ட்ரேயின் அடியில் வைத்து பயன்படுத்தலாம்.

கேட்ரிட்ஜ்

கேட்ரிட்ஜ் காய்ந்து விடாமல் இருக்க அதனினை ஹீட்-ப்ரூஃப் ப்ளாஸ்டிக் பையில் வைத்து வெதுவெதுப்பான நீரில் அமிழ்த்து வைக்கலாம்.

வை-பை ரவுட்டர்

உங்களது வை-பை ரவுட்டரில் சிக்னல் சிறப்பாக பெற அதன் ஆன்டெனா பகுதியில் அலுமினிய தகடினை பொருத்தலாம்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Quick Fixes For Your Gadgets That You Need to Learn Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்