இந்தியாவிற்கு கிடைத்த இன்னொரு மணி மகுடம்..!

|

"இந்தியா நிஜமாகவே ஒரு வளரும் நாடு தானா..?! இல்லை ஏற்கனவே வளர்ந்த நாடா..!?" என்ற எண்ணம் பல நாடுகளுக்கு வரும் வகையில் இந்தியாவின் வளர்ச்சி நிலை இருக்கிறது என்பது தான் நிதர்சனம்..!

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..!

சூப்பர் பவர் நாடுகள் இந்தியாவிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதே, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு நல்ல சான்றாகும்.

இந்தியாவிடம் உதவி : அமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியா..!

அந்த பட்டியலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை சேர்ந்துள்ளது..!

ஜிசாட்-6 :

ஜிசாட்-6 :

இந்தியாவின் இஸ்ரோ சமீபத்தில் ஜிசாட்-6 (GSAT-6) செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது என்று மட்டும் தான் பெரும்பாலோனோர்களுக்கு தெரியும்..!

இஸ்ரோ :

இஸ்ரோ :

கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6 தான், இஸ்ரோவின் 25-வது விண்கலம் என்பது பெரும்பாலனோர்களுக்கு தெரியாது..!

இந்தியா :

இந்தியா :

அதாவது ஜிசாட்-6 தான் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கம் பெற்ற இஸ்ரோவின் ஜியோ ஸ்டேஷனரி கம்யூனிக்கேஷன் சாட்டிலைட் (Geostationary communication satellite) ஆகும், மேலும் இது ஜிசாட் (GSAT) செயற்கைகோள் வரிசையில் 12-வது சாட்டிலைட் ஆகும்..!

உதவி :

உதவி :

சமீபத்தில் தங்களின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த அமெரிக்காவும், இந்தோனேஷியாவும் இந்தியாவின் இஸ்ரோ உதவியை நாடியது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு :

தொகுப்பு :

அப்படியாக, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இஸ்ரோவின் பெருமையான 25-வது செயற்கைகோள் பற்றிய மேலும் பல தகவல்கள் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன..!

விரிவாக்கம் :

விரிவாக்கம் :

ஜிசாட்-6 என்பதின் விரிவாக்கம் ஜியோ-சின்க்ரனைஸ் சாட்டிலைட் (Geosynchronous Satellite) ஆகும்..!

ராணுவம் :

ராணுவம் :

விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6 இந்திய ராணுவத்தின் தொடர்பியல் (Military communication) சார்ந்த மிக முக்கியமான செயற்கைகோள் ஆகும்..!

ஆண்டனா :

ஆண்டனா :

அது மட்டுமின்றி இதுவரை இஸ்ரோவால் பயன்படுத்தப்பட்ட ஆண்டனாக்களிலேயே (Antenna) ஜிசாட்-6 ஆண்டனா தான் மிகவும் பெரியதாகும்..!

பெரியது :

பெரியது :

ஜிசாட்-6-ன் எஸ்-பேண்ட் அன்ஃபுரபில் ஆண்டனாவின் (S-Band Unfurlable Antenna) விட்டம் 6 மீட்டர்கள் ஆகும்..!

பணி :

பணி :

அந்த ஆண்டனா, விண்ணில் ஒரு குடை போல் விரிந்து பின் தொடர்பியல் சார்ந்த பணிகளில் ஈடுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

எடை :

எடை :

மேலும் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிசாட்6-ன் எடை 2117 கிலோ என்பதும் குறிப்பிடத்தக்கது..!

இந்திய ராக்கெட் :

இந்திய ராக்கெட் :

ஜிசாட் செயற்கைகோளை தாங்கி சென்ற இந்திய ராக்கெட் (Geo-synchronous Satellite Launch Vehicle-D6 (GSLV-D6)) சுமார் 50 மீட்டர் உயரமும், 416 டன் எடையும் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

வெற்றி :

வெற்றி :

பல விதமான புது தொழில்நுட்பங்களை முதல் முயற்சிலேயே செய்து பார்த்து வெற்றி அடைவதில் இந்தியாவின் இஸ்ரோ, எந்த குறையும் வைப்பதில்லை என்பதற்கு ஜிசாட்-6 செயற்கைகோளும் ஒரு எடுத்துக்கட்டாகும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Checkout here about the Proud moment for ISRO. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X