கூகுள் - எனக்கு இன்னொரு பக்கம் இருக்கு..!

By Meganathan
|

உலகின் பிரபல தேடுபொறியாக விளங்கும் கூகுளின் மற்றொரு பக்கத்தை தான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம். உங்களது அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் கூகுள் நிறுவனம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றது.

தொழில்நுட்ப சந்தையில் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தற்சமயம் மேற்கொண்டு வரும் திட்டங்களின் பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ரோபோட்டிக்ஸ்

ரோபோட்டிக்ஸ்

தற்சமயம் வரை கூகுள் நிறுவனம் பல ரோபோட் நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது. மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் அந்நிறுவனம் ரோபோட்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகின்றது.

தானியங்கி கார்கள்

தானியங்கி கார்கள்

ஃவோல்க்ஸ்வேகன், மெர்சிடிஸ், டெஸ்லா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்களை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் சாலை விபத்துகளை வெகுவாக குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி

விண்வெளி

லூனார் இசட்ப்ரைஸ் எனும் திட்டத்தின் மூலம் சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் நிறுவனம் தனது கட்டளைகளை நிறைவேற்றுபவர்களுக்கு $20 மில்லியன் வழங்க
இருக்கின்றது. அதன் படி நிலவில் பத்திரமாக தரையிறங்கி, நிலவில் ஏதாவதொரு திசையில் சுமார் 500 மீட்டர் வரை பயனம் மேற்கொண்டு எச்டிடிவி ஸ்ட்ரீம் செய்ய வேண்டும்.

ப்ராஜக்ட் அரா

ப்ராஜக்ட் அரா

இந்த திட்டத்தின் மூலம் உங்களது ஸ்மார்ட்போனினை உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி கொள்ள வழி வகுக்கின்றது.

ப்ராஜக்ட் டாங்கோ

ப்ராஜக்ட் டாங்கோ

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் உங்களுக்கு தெரியாத இடங்களை முப்பறிமான வடிவில் பார்க்க வழி வகுக்கும்.

கேல்சியோ

கேல்சியோ

இத்திட்டமானது கொடிய நோய்களுக்கு புதிய சிகிச்சை முறைகளை கண்டறிவதாகும்.

லிஃப்ட்வேர்

லிஃப்ட்வேர்

இந்த கரண்டியை எவ்வளவு குலுக்கினாலும் அதில் இருக்கும் பொருள் கீழே சிந்தாது.

கூகுள் காண்டாக்ட் லென்ஸ்

கூகுள் காண்டாக்ட் லென்ஸ்

கூகுள் நிறுவனத்தின் காண்டாக்ட் லென்ஸ் மூலம் மனிதர்களின் உடலில் இருக்கும் சர்க்கரை அளவுகளை கண்டறிய முடியும், இதை மேற்கொள்ள ரத்தத்தை சிந்தும் அவசியம் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாகானி

மாகானி

பார்க்க சிறிய ரக விமானம் போன்று காட்சியளிக்கும் இந்த கருவியை கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுப்பட்டு வருகின்றது.

ப்ராஜக்ட் லூன்

ப்ராஜக்ட் லூன்

இந்த திட்டமானது காற்று நிரப்பப்பட்ட பலூன்களை கொண்டு இண்டர்நெட் சேவை வழங்குவதாகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are the list of some Projects Showing Google Has The Future Figured Out. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X