30,000 கோடிக்கு பிளாக்பெர்ரி கம்பெனியை வாங்கும் இந்தியர்

|

பிளாக்பெர்ரி நிறுவனம் சில மாதங்களாகவே மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் இப்பொழுது தன்னைதானே விற்பனைக்கு அறிவித்திருந்தது. பிளாக்பெர்ரி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான பேர்பாக்ஸ் பினான்ஸ் (fairfax financial holdings) அமைப்பு இந்த கம்பெனியை வாங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

பிளாக்பெர்ரியின் பங்குதாரரான பேர்பாக்ஸ் பினான்ஸ் பிளாக்பெர்ரியை கம்பெனியை 4.7 பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளது . இந்திய ரூபாயின் மதிப்பின்படி கிட்டதிட்ட 30,000 கோடிக்கு பிளாக்பெர்ரி நிறுவனம் விற்க்கப்படுகிறது.

பேர்பாக்ஸ் பினான்ஸ் அமைப்பின் தலைமை எக்ஸிகியூடிவாக இருப்பவர் பிரேம் வட்ஸா ஆவார். கெனாடாவில் உள்ள பெரிய பினான்ஸ் அமைப்பில் தலைமை எக்ஸிகியூடிவாக இருக்கும் இவர் ஒரு இந்தியர் ஆவார். இவர் ஹைத்திராபாத்தில் பிறந்தவர்.

பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த பேர்பாக்ஸ் பினான்ஸ் அமைப்பு அந்நிறுவனத்தை முழுமையாக இப்பொழுது 30,000 கோடிக்கு வாங்கு உள்ளதுக்கு முக்கிய காரணம் திரு. பிரேம் வட்ஸா தான். இவர் கனடாவின் வாரன் பப்பெட் (waren buffet) என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார். இதை பற்றிய மேலும் சில தகவல்களை கிழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரி

சில ஆண்டுகளுக்கு முன் பிளாக்பெர்ரி நிறுவனம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. எக்ஸிகியூட்டிவ் ஆபீஸர்கள், பெரு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என எல்லோரும் பிளாக்பெர்ரியை ஒரு காலத்தில் அதிகம் விரும்பினர்.

பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரி மொபைல்ளை பயன்படுத்துவதை சிலர் கவுரவமாகவும் கருதி வந்தனர். ஆனால் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்று நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமான பிறகு பிளாக்பெர்ரி சற்று தடுமாற தொடங்கியது.

பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரி

அதன் பிறகு பிளாக்பெர்ரியால் பழைய நிலைமைக்கு திரும்பி வர முடியவில்லை. இந்நிறுவனம் ஏராளமான நஷ்டங்களை சந்தித்து வந்தது.

பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரி

கிட்டதிட்ட 6000 கோடி மதிப்பிலான பிளாக்பெர்ரி மொபைல்கள் விற்க்கப்படாமல் உள்ளதாக தகவல் வந்தது. இந்த நஷ்டத்தின் காரணமாக சமீபத்தில் தனது வேலை ஆட்களில் 40 சதவீதத்தினரை நீக்கப்போவதாகவும் இந்நிறுவனம் அறிவித்தது.

பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரி

அதன் பிறகு, இப்பொழுது இந்நிறுவனம் ரூ.30,000 கோடிக்கு விற்க்கப்பட உள்ளது.

பிரேம் வட்ஸா

பிரேம் வட்ஸா

இந்நிறுவனத்தின் வாங்க முக்கிய காரணமாக இருக்கும் பிரேம் வட்ஸா ஹைத்திராபாத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இந்தியர் ஆவார்.

பிரேம் வட்ஸா

பிரேம் வட்ஸா

கெனடாவில் உள்ள பேர்பாக்ஸ் பினான்ஸ் அமைப்பிற்க்கு தலைமை எக்ஸிகியூடிவாக இருக்கும் பிரேம் வட்ஸா ஜனவரி 2012ல் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பங்குதாரர் ஆனார்.

பிரேம் வட்ஸா

பிரேம் வட்ஸா

இவர் பிளாக்பெர்ரி நிறவனத்துடன் இணைந்த பின் பல முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிரேம் வட்ஸா

பிரேம் வட்ஸா

இவர் கனடாவின் வாரன் பப்பெட் (waren buffet) என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். செப்டம்பர் 11 2002ல் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக பேர்பாக்ஸ் பினான்ஸ் கம்பெனி நஷ்டத்தை சந்தித்தது.

பிரேம் வட்ஸா

பிரேம் வட்ஸா

அதன் பிறகு பிரேம் வட்ஸா வழிநடத்தல் மற்றும் முயற்ச்சியால் அந்நிறுவனம் பழைய நிலைமைக்கு வந்தது. இதனாலயே இவர் கனடாவின் வாரன் பப்பெட் (waren buffet) என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார் எனலாம்.

பிரேம் வட்ஸா

பிரேம் வட்ஸா

பேர்பாக்ஸ் பினான்ஸ் சேர்மேன் ஆன பிரேம் வட்ஸா ஹைத்திராபாத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு கெமிக்கல் இன்ஞ்னீயர் ஆவார்.

பிரேம் வட்ஸா

பிரேம் வட்ஸா

1985 ஆம் ஆண்டில் பேர்பாக்ஸின் நிர்வாகி ஆனார். முதலில் இந்த கம்பெனி ஒரு மிகப்பெரிய முதலீட்டாளராக விளங்கவில்லை. பிரேம் வட்ஸாவும் தன் முயற்ச்சியை கைவிடாமல் கம்பெனியை வழிநடத்தி வந்தார்.

பிரேம் வட்ஸா

பிரேம் வட்ஸா

2006க்கு பிறகு பேர்பாக்ஸ் பினான்ஸ் கம்பெனி மிகப்பெரிய முதலீட்டாளராக விளங்கியது. இதற்க்கு முக்கிய காரணமானவர் பிரேம் வட்ஸா தான்.

பிரேம் வட்ஸா

பிரேம் வட்ஸா

பிளாக்பெர்ரியின் பங்குதாரராக இருந்த இவர் அந்நிறுவனம் விற்க்கப்பட உள்ளது என்ற தகவலை கேட்டு அதில் இருந்த வெளிவர முடிவு செய்தார். பிளார்பெர்ரி நிறுவனம் விற்க்கப்படுவிதில் இவருக்கு விருப்பம் இல்லை.

பிரேம் வட்ஸா

பிரேம் வட்ஸா

பிளாக்பெர்ரி நிறுவனம் பல வெற்றி கதைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. அது ஒரு நிறுவனம் என்பதில் இவருக்கு அதிக நம்பிக்கை உண்டு. அதனால் இவரே இப்பொழுது பிளாக்பெர்ரி நிறுவனத்தை 30,000 கோடிக்கு வாங்க உள்ளார். பிளாக்பெர்ரி நிறுவனத்தை பழைய நிலைமைக்கு மீட்டு எடுக்க மிகப்பெரிய தூணாக இருக்கும் இந்த இந்தியருக்கு ஒரு சல்யூட்!!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X