ஃபேஸ்புக் ரியாக்ஷன்ஸ் சர்ச்சையில் சிக்கிய மார்க்.!!

By Meganathan
|

ஃபேஸ்புக் பயனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்க அதன் சேவைகளும், பயன்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. சீரான இடைவெளியில் புதுப்புது அப்டேட்களை வழங்கி வரும் மார்க், ஒவ்வொரு அப்டேட் மூலம் நமக்குப் பயன்தரும் அல்லது நன்மையை விளைவிக்கும் அம்சங்கள் வழங்கப்படுவதாகக் கூறுவது புதியது கிடையாது.

சில அம்சங்களைப் பயன்படுத்தி அந்நிறுவனம் நம்மை உளவு பார்ப்பதாக பல சமயங்களில் சர்ச்சைகள் கிளம்புவதும், பின் அந்தச் செய்தி அப்படியே மறைவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. நாமும் எவ்வித கவலையும், பயமும் இன்றி ஃபேஸ்புக் பயன்படுத்திக்கொண்டே தான் இருக்கின்றோம்.

01

01

ஃபேஸ்புக்கில் பல காலமாக நாம் பயன்படுத்தி வரும் லைக் பட்டன் போரடிக்கும் என மார்க் நமக்கு வழங்கிய எமோஷன் ஐகான்கள் நம்மவர்களின் போஸ்ட்களுக்கு வித்தியாசமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருந்து வருகின்றது.

02

02

ஃபேஸ்புக் அறிமுகம் செய்த ரியாக்ஷன்ள் அனிமேஷன் வடிவில் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

03

03

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்புக் எமோஷன் ஐகான்கள் நம் உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு நமது அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து வருவதாக பெல்ஜியம் நாட்டுக் காவல் துறை தெரிவித்துள்ளது.

04

04

இது குறித்து அந்நாட்டுக் காவல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 'வாடிக்கையாளர்களின் தகவல்களை சேமிக்கும் எவ்வித வழியையும் ஃபேஸ்புக் தவற விடாது, இதனை அந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதமும் நிரூபித்துள்ளது' எனத் தொடங்கியது.

05

05

தினமும் பயன்படுத்துவதால் நாமும் ஃபேஸ்புக் பயனர்களாக இருக்கின்றோம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ரியாக்ஷன்களையும் அந்நிறுவனம் கவனமாக பதிவு செய்து நம் ப்ரோஃபைல் குறித்து நன்கு அறிந்து கொள்ளும்.

06

06

அதிகபட்சம் ஆறு ஐகான்களையும் மட்டும் வழங்கியிருப்பதால், நாம் கடந்து வரும் ஒவ்வொரு போஸ்ட் மூலம் நமது எண்ணம், மற்றும் மனநிலையை மிகவும் துல்லியமாக ஃபேஸ்புக் அல்காரிதம்களால் டிராக் செய்ய முடியும்.

07

07

இதன் காரணமாக உங்களது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள அதிவேகமாக க்ளிக் செய்வதைத் தவிர்க்கலாம்.

08

08

உங்களது ஒவ்வொரு உணர்வுகளையும் சேமித்து வைக்கும் ஃபேஸ்புக் அதன் மூலம் நீங்கள் விருப்பம் தெரிவிக்கும் போஸ்ட் சார்ந்த விளம்பரங்களை உங்களது டைம்லைனில் போஸ்ட் செய்யும்.

09

09

புதிய சேவை வழங்கி அதன் மூலம் விளம்பரம் செய்ய நினைத்து சர்ச்சையில் சிக்குவது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு முதல் முறை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

10

10

மாதம் சுமார் 30 கோடி பேர் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் செயலியில் விளம்பரங்களை வழங்க ஃபேஸ்புக் அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. துவக்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் விளம்பரங்கள் வழங்கப்பட்டு வந்த செயலியில் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Police Warn Users to Avoid Facebook Reactions Feature Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X