இந்தியாவில் ஐபோன் கடத்தியவர்கள் கைது..!!

Posted by:

இந்தியாவில் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் கருவிகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கடத்தப்படும் ஐபோன்கள் இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக இணையதளங்களில் பல்வேறு அறிவிப்புகளும் விளம்பரங்களும் வெளியானதை தொடர்ந்து இந்தியாவில் புதிய ஐபோன் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொறுமையில்லாதவங்க ரூ,1,14,999க்கு புதிய ஐபோனை வாங்கிகோங்க..!!

இந்தியாவில் ஐபோன் கடத்தியவர்கள் கைது..!!

ஐபோன் கருவிகள் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஐபோன்களை வைத்திருந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து சுமார் 182 ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பேட்டரி பேக்கப் : ஆண்ட்ராய்டை பின் தள்ளும் ஐபோன்..!!

இந்தியாவில் ஐபோன் கடத்தியவர்கள் கைது..!!

உளவு துறை அளித்த தகவலின் படி ஹாங் காங் நகரில் இருந்து புதிய ஐபோன் கருவிகளை கடத்தி வந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளை அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிட இருக்கின்றது. இத கருவிகளின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Police detains smugglers with 182 iPhone 6S at IGI Airport in New Delhi. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்