ஜியோவாசிகளுக்கு 2017, மார்ச் 31-வரை இலவசமாக போக்கிமோன் கோ.!

இந்தியாவில் இன்று முதல் போக்கிமோன் கோ, கூட்டு சேர்ந்தது ரிலையன்ஸ் ஜியோ.!

Written By:

இந்த ஆண்டின் மிகவும் பரபரப்பான மொபைல் வீடியோ கேம் ஆன 'போக்கிமோன் போ' இறுதியாக ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த கேமை கூகுள் ப்ளே வழியாக பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் இந்தியாவில் இன்று முதல் ஆப் ஸ்டோரில் போக்கிமொன் கோ கிடைக்கும்.

இந்த கூட்டு மூலமாக, இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதாரர் கொண்டு ஆயிரக்கணக்கான 'போக்ஸ்டாப்ஸ்' அல்லது 'ஜிம்ஸ்' ஆகியவைகள் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் தோற்றுவிக்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டவுண்லோட்

மேலும், ஜியோ சிம் வாடிக்கையாளர்கள் போக்கிமோன் கோ கேமை 31 மார்ச், 2017 வரை தரவுக்கட்டணங்கள் இல்லாமல் டவுண்லோட் செய்து விளையாட முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

500 மில்லியன் பதிவிறக்கம்

இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட மிகை யதார்த்த மொபைல் கேம் ஆன போக்கிமோன் கோ சில நாட்களுக்குள் மில்லியன் கணக்கான பயனர்களை திரட்டுவதுடன், உலகம் முழுவதும் பரவியது மாறட்டும் அதன் தொடக்க நாள் முதல் இன்று வரையிலாக 500 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வமாக

இந்த விளையாட்டு வெளிவந்து, மெய்நிகர் உயிரினங்களை தேடி பிடிக்க பயனர்களை தெரு தெருவாக கிலோமீட்டர் கிலோமீட்டர்களாக நடக்க, ஓட, பயணிக்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது வரை, போக்கிமொன் கோ அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் கிடைக்கவில்லை.

போர்ஸ் இன்ஸ்டால்லிங்

இருப்பினும், நாட்டில் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் போர்ஸ் இன்ஸ்டால்லிங் செய்யப்பட்டு போக்கிமோன் கதாபாத்திரங்களை கைப்பற்ற மக்கள் நடமாடுவதை இந்தியாவிலும் பார்க்கக்கூடிய ஒரு பொதுவான விடயமாகிவிட்டது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோசாட்

ஜியோ சோசியல் மெஸேஜிங் ஆப் ஆன ஜியோசாட் மூலம் போக்கிமொன் பிளேயர்கள் ஒரு பிரத்யேக போக்கிமொன் சேனலை அணுக முடியும். இந்த சேனல் போக்கிமொன் கோ கேம் பிரியர்களை ஒருங்கிணைக்க உதவும்.

உற்சாகமாக உள்ளது

"உலகளவில் 500 மில்லியன் பதிவிறக்கங்களை கொண்ட போக்கிமோன் கோ கேம் ஆனது ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் மூலம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது உற்சாகமாக உள்ளது" என்று ரிலையன்ஸ் ஜியோ பிரசிடெண்ட் மேத்யூ உம்மன் கூறியுள்ளார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Pokemon To Make India Debut On Wednesday, Partners Reliance Jio. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்