கேம் விளையாடுவது நல்லது..!!

By Meganathan
|

பொதுவாக விளையாடுவது அனைவருக்கும் நல்லது. உடலை சீராக வைத்து கொள்ளவும், மனதை குதூகலமாக வைக்க கேம் உதவும். உடலை வருத்தி கொண்டு விளையாடும் போது மட்டுமே இவை சாத்தியம். மற்றபடி இன்றைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கணினியில் விளையாடும் கேம்களினால் எவ்வித பயனும் இல்லை என்பதே பொதுவானவர்களின் கருத்து.

இது முற்றிலும் உண்மை இல்லை என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது உலகின் பிரபல கேம் வடிவமைப்பாளரான ஜேன் மெக்கோனிகல் அவர்களின் கருத்து.

கருத்து

கருத்து

அதன் படி கேம் விளையாடும் போது மூளை சுருசுருப்பாகும் என்றும், கவனத்தை அதிகரிக்கும் என்றும் பல்வேறு வகையில் பேருதவியாக இருக்கும் என்றும் ஜேன் தெரிவிக்கின்றார்.

ஆய்வு

ஆய்வு

கேம் விளையாடுவது குறித்த நடத்தப்பட்ட ஆய்வில் சில வித கேம்களை கணினியில் விளையாடும் போது மூளை அதிக திறன் கொண்டிருக்கின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

பதிவு

பதிவு

கேம் விளையாடுவது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு சரியான ஆதாரங்கள் கிடையாது என்றும் இதை வலியுறுத்தும் வகையில் 2014 ஆம் ஆண்டு உலகின் பிரபல நரம்பியல் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.

விளையாட்டு

விளையாட்டு

அடுத்து வரும் ஸ்லைடர்களில் மூளையை சுருசுருப்பாக்கும் தலைசிறந்த கணினி கேம்களின் பட்டியலை பாருங்கள்.

கால் ஆஃப் டியூட்டி

கால் ஆஃப் டியூட்டி

துப்பாக்கி மூலம் எதிரிகளை சுடும் தீம் கொண்ட கேம் தான் கால் ஆஃப் டியூட்டி. இந்த கேம் விளையாடும் போது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணினி போன்ற பாடங்களில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும் என ஜேன் கூறுகின்றார்.

ஃபோர்ஸா

ஃபோர்ஸா

அதிவகே ரேஸ் கேம் தான் ஃபோர்ஸா, இதை விளையாடும் போது பிரச்சனைகளின் போதும் சிறப்பான முடிவுகளை எடுக்க முடியும்.

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ

பெரும் நகர் ஒனஅறின் குற்றவாளியாக விளையாடும் இந்த கேம் விளையாடும் போது அதிக தகவல்களை மூளையில் சேமிக்க முடியும். மேலும் கேம் விளையாடாதவர்களை விட மூன்று மடங்கு அதிக தகவல்களை மூளையில் பதிவு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் க்ராஃப்ட்

ஸ்டார் க்ராஃப்ட்

ராணுவ அறிவியல் சார்ந்த கற்பனை விளையாட்டு தான் ஸ்டார் கிராஃப்ட். இந்த கேம் விளையாடும் போது கற்பனை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சிரமம் இன்றி எதிர்கொள்ள முடியும்.

மாஸ் எஃபெக்ட்

மாஸ் எஃபெக்ட்

கற்பனை திறன் மற்றும் தகவல் சேகரிக்கும் திறன் போன்றவைகளை அதிகரிக்க மாஸ் எஃபெக்ட் போன்ற அறிவியல் சார்ந்த கற்பனை கேம் பேருதவியாக இருக்கும்.

ஃபைனல் ஃபேன்டசி

ஃபைனல் ஃபேன்டசி

ஃபைனல் ஃபேன்டசி போன்ற கேம் விளையாடும் போது முடிவுகளை மிகவும் வேகமாகவும் சரியாகவும் எடுக்க முடியும் என கூறப்படுகின்றது.

அடிமை

அடிமை

'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான்'
இது போன்ற கணினி கேம்களை விளையாடுவது மூளைக்கு நல்லது என்றாலும் நீண்ட நேரம் விளையாடுவது நிச்சயம் ஆபத்தில் முடியும் என்பதே உண்மை.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Playing video games could help improve your problem solving skills. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X