"இந்தாண்டுக்குள் பூமி காலியாகும்" - புது சர்ச்சையை கிளப்பும் 'கான்ஸ்பிரஸி தியேரிஸ்ட்ஸ்'.!

Written By:

நிபிறு கெட்டக்ஸ்ம் (Nibiru cataclysm) அதாவது நிபிறு பிரளயம் - பூமி மற்றும் ஒரு பெரிய கிரகப்பொருள் ஆகியவற்றுக்கு இடையில் நடக்கலாம் அல்லது மிக நெருக்கமான முறையில் தவிர்க்கப்படலாம் என்று நம்பப்படும் ஒரு மோதல் சம்பவம் ஆகும். இந்த சம்பவம் 21-ஆம் நூற்றாண்டில் நிகழும் என்று நம்பப்படுகிறது.

புகைப்பட ஆதாரம் ஒன்று கிடைத்ததின் மூலம் நிபிறு பிரளயமானது நிகழப்போகிறது, அதுவும் இந்தாண்டுக்குள் நிகழப்போகிறது என்று புதியதொரு சர்ச்சையை கிளப்பி உள்ளனர் 'கான்ஸ்பிரஸி தியேரிஸ்ட்ஸ்' எனப்படும் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள். மேலும் இது சார்ந்த தகவல்கள் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ப்ளானட் எக்ஸ் :

'டூம்ஸ் டே பிலிவர்ஸ்' எனப்படும் உலகின் கடைசி நாள் என்பதை நம்புபவர்கள் மோதல் நிகழ்த்தும் கிரகப்பொருளை ப்ளானட் எக்ஸ் (Planet X) அல்லது நிபிறு (Nibiru) என்று குறிப்பிடுகின்றனர்.

நான்கு மடங்கு :

ப்ளானாட் எக்ஸ் ஆனது ஜுப்பிட்டர் கிரகத்தை விட நான்கு மடங்கு பெரியதாக இருக்கும் என்று 'டூம்ஸ் டே பிலிவர்ஸ்'களால் கணிக்கப்ப்பட்டுள்ளது.

டைனோசர் இனம் :

இது போன்ற பிரளயம் தான் உலகில் இருந்த டைனோசர் இனத்தை முற்றிலுமாக அழித்தது என்றும் நம்பப்படுகிறது.

பிரளயம் :

தற்போது அதே போன்ற சம்பவம் நிகழ்ப்போகிறது என்றும், ப்ளானாட் எக்ஸ் ஆனது பூமியை மிக நெருக்கமாக கடக்கப்போகிறது பின் பிரளயம் நிகழும் என்றும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

புகைப்படங்கள் :

சமீபத்தில் சமூக வலைதளங்களில் பதிவான ப்ளானாட் எக்ஸ் புகைப்படங்கள் தான் இந்த சர்ச்சைக்கு முழு முதல் காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈர்ப்பு ஆற்றல் :

மோதல் தவிர்க்கப்பட்டாலும், பூமியோடு ப்ளானட் எக்ஸ் நிகழ்த்தும் நெருக்கமானது ஈர்ப்பு ஆற்றல் மூலம் உலகின் கண்டங்களை நகர்த்தும் என்றும் கான்ஸ்பிரஸி தியேரிஸ்ட்ஸ் விளக்குகின்றனர்.

3,600 ஆண்டு :

நிபிறு ஆனது சூரிய சுற்று வட்டப்பாதையில், 3,600 ஆண்டுகளுக்கு ஒருமுறை நுழைகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண மாற்றங்கள் :

இந்த நிபிறு ஆனது, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் வட்டப் பாதையில் விளக்கம் இல்லாத அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்றும் சில சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

லென்ஸ் ப்லேர் :

ஆனால் புகைப்படத்தில் பதிவாகி உள்ளது எக்ஸ் ப்ளானாட் இல்லை, வெறும் லென்ஸ் ப்லேர் (Lens Flare) தான் என்ற குற்றச்சாட்டும் எழுந்த வண்ணம் உள்ளது.

அதிகாரப்பூர்வமான அறிவியல் சான்று :

அது மட்டுமின்றி 'கான்ஸ்பிரஸி தியேரிஸ்ட்ஸ்'களை தவிர்த்து இந்த நிபிறு பிரளயம் சார்ந்த எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிவியல் சான்றும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ :

உலகம் முழுவதும் நிபிறு / ப்ளானட் எக்ஸ் தென்பட்டது என்பது சார்ந்த வீடியோ..!

புரளி :

உடன் இது போன்ற 'உலகம் அழியும்' சர்ச்சைகள் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் தொடக்கத்திலும் கிளம்புவது இயல்பே என்றும் இதுவும் இந்த ஆண்டின் சிறந்த புரளிகளில் ஒன்றே என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

சாத்தியம் :

மேலும் பூமியுடன் ஆன விண்கல் மோதல்கள் அனைத்துமே சாத்தியம் இல்லாதது அல்ல என்பதும், அதற்கு ரஷ்யாவில் விழுந்த விண்கல் தான் எடுத்துக்காட்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

69 ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் :

2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-0ஆம் தேதி ரஷ்யாவில் விழுந்த இந்த விண்கல் ஆனது சுமார் 60 ஆயிரம் முதல் 69 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தரையில் மோதியது.

வீடியோ

ரஷ்யாவில் விழுந்த விண்கல் - பதிவான வீடியோ..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Planet X should be The best Internet hoax of the year..? Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்