செவ்வாயில் மேலும் ஒரு 'மர்ம உருவம்' கண்டுப்பிடிப்பு..!

Written By:

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்ககத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவால் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் ரோபோட்டிக் ஸ்பேஸ் மிஷன் தான் - மெர் (MER), அதாவது - மார்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ரோவர் (Mars Exploration Rover). செவ்வாய் கிரகத்தில் உள்ள பரவலான பாறைகள் மற்றும் செவ்வாய் கிரக நிலப்பகுதிகளில் (மண்) நீர் செயல்பாட்டின் துப்பு ஏதாவது கிடைக்கிறதா என்பதை ஆராய்வது தான் நாசா ரோவரின் அதிமுக்கியமான பணியாகும்.

அதுபோன்ற ஆய்வுகளுக்கு நடுவே நாசா ரோவரிடம் சில 'விசித்திரங்களும்' அவ்வப்போது சிக்குவதுண்டு. அதில் மர்மமான நடமாடும் பெண் உருவம், செவ்வாய் எகிப்திய பிரமீட், செவ்வாய் எலி போன்ற 'சந்தேக' உருவங்கள் பெரிய அளவிலான பரபரப்புகளை கிளப்பிய உருவங்கள் ஆகும். அந்த பட்டியலில் மேலும் ஒன்று இணைந்துள்ளது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்ட்ரீட்கேப1 :

சமீபத்தில் கான்ஸ்ப்ரஸி தியேரிஸ்ட்ஸ் எனப்படும் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்களுக்கு 'தீனி' போடும் வகையில் ஸ்ட்ரீட்கேப1 எனும் யூட்யூப் சேனல் நாசா ரோவர் சார்ந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி போன்ற உருவம் :

அந்த வீடியோவில் துப்பாக்கி போன்ற உருவம் ஒன்று தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் அந்த துப்பாக்கி உருவம், ஏலியன் நம்பிக்கையாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கிறது.

மார்டியன் பிஸ்டல் :

மார்டியன் பிஸ்டல் (Martian Pistol) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த துப்பாக்கி உருவமானது செவ்வாய் கிரகத்தின் மவுண்ட் எட்ஜ்கம்பே (Mount Edgecumbe) மற்றும் டோவியக் ரிட்ஜ் (Wdowiak Ridge) என்ற இரண்டு பகுதிகளுக்கும் நடுவே கிடைக்கப்பெற்றுள்ளது.

போலியான வேலை :

மேலும், இந்த புகைப்படங்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டவைகள் என்றும், இந்த புகைப்படத்தில் எந்த விதமான போலியான வேலைகள் நடந்திருப்பதாய் இதுவரை தெரியவரவில்லை என்றும் கான்ஸ்ப்ரஸி தியேரிஸ்ட்ஸ் கருத்து கூறியுள்ளனர்.

பறக்கும் தட்டு விபத்து :

மேலும், துப்பாகியின் அருகே சில சிதைவுகளை காண முடிவதால் இது ஏலியன்களின் பறக்கும் தட்டு விபத்தில் தவறவிடப்பட்டு இருக்கலாம் என்கிறார் ஸ்காட்.சி வாரிங் (யூஎஃப்ஓ சைட்டிங் டெய்லியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்)

ஏலியன் தொழில்நுட்பம் :

மேலும் இதுபோன்ற ஏலியன் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்தில்தான் நாசா தனது ரோவரை செவ்வாக்கு அனுப்பி உள்ளதாக சந்தேகப்படுவதாகவும் ஸ்காட்.சி வாரிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ட்ரிகர் டைப் பிஸ்டல் :

சாராத பிற ஆய்வாளர்கள் இந்த புகைப்படத்தில் தெரியும் துப்பாக்கி உருவம் ஆனது மிகவும் தெளிவாக இருப்பததின் மூலம் இது ஒரு ட்ரிகர் டைப் பிஸ்டல் என்பதை அறிந்துகொள்ள முடிவதாக கூறியுள்ளனர்.

பண்டைய இடுகாடு :

துப்பாக்கி போன்ற உருவம் பதிவான அதே நாள் பண்டைய இடுகாடு (பார்க்க அப்படி இருப்பதாக இருக்கிறது) போன்ற ஒரு உருவமும் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Pistol Found On Mars By NASA Rover. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்