பேடிஎம் ஆப்பில் ஐந்து புதிய அம்சங்கள் அறிமுகம், அவைகளென்ன.?

பேடிஎம் நிறுவனம் விரைவில் அதன் பேமண்ட் வங்கி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ள இந்த தருணத்தில், பேடிம் ஆப் மேம்படுத்தலில் சில புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

|

இந்தியாவில் ரூ.1000/- மற்றும் ரூ.500/- ஆகிய நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட பின்னர், பேடிஎம் ஆப் ஆனது நாட்டில் மிகவும் பிரபலமடைந்தது. பலலட்சம் டவுன்லோட்களையும், பல மடங்கு அதிக சதவீகித பணபரிமாற்றத்தையும், போட்டியே சந்திக்காத ஒரு நிலையில் சந்தையில் நிற்கும் பேடிஎம் ஆப் ஆனது அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மேலும் இலகுவான மற்றும் வேகமான சேவை வழங்கும் நோக்கில் அதன் பணப்பை பயன்பாட்டில் ஐந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பயன்பாடானது லோ-எண்ட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மெதுவான பிணைய பகுதிகளில் கூட வேகமாக அதாவது 3 மடங்கு அதிக வேகத்தில் இயங்கும் என்று பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. பேடிஎம் நிறுவனம் விரைவில் அதன் பேமண்ட் வங்கி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதன் ஆப்பில் சேர்த்துள்ள ஐந்து புதிய அம்சங்கள் என்னென்ன பற்றிய தொகுப்பே இது.

வேலட்டில் பணம் சேர்ப்பது

வேலட்டில் பணம் சேர்ப்பது

இந்த மேம்படுத்தப்பட்ட ஆப்பில் உங்கள் பேடிஎம் வேலட்டில் பணம் சேர்ப்பது இனி மிக எளிதாக மற்றும் வேகமாக நிகழ்த்தலாம். இப்போது இந்த செயல்முறை ஒரு ஒற்றை திரையில், விரைவான லோட் நேரத்தில் ஒரு வேகமாக பயனர் அனுபவதை வழங்குகிறது.

கைரேகை

கைரேகை

உங்கள் இ-வேலட்தனை மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்க, இந்த பேடிஎம் அப்டேட்டில் பயோமெட்ரிக் ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்போது உங்கள் பேடிஎம் கடவுச்சொற்ககளாக உங்கள் கைரேகைகளை அமைக்க முடியும்.

கேலரியில் இருந்து கூட ஸ்கேன்

கேலரியில் இருந்து கூட ஸ்கேன்

இந்த அப்டேட்டில் மூலம் இனி யாருடைய க்யூஆர் கோட்-ஐயும் அவர்களின் ஸ்மார்ட்போன் கேலரியில் இருந்து கூட ஸ்கேன் செய்து பணப்பரிமாற்றம் நிகழ்த்தலாம். இதை செய்ய, நீங்கள் திரையில் மேல் வலது மூலையில் உள்ள 'ஸ்கேன் க்யூஆர் கோட் ப்ரம் கேலரி' என்பதை டாப் செய்தால் போதும்.

ரூ.50,000/- வரை

ரூ.50,000/- வரை

செல்ப்-டிக்ளர்டு மெர்ச்சன்ட்ஸ் அதாவது தன்னை விற்பனையாளர்கால் என்று சுயமாக அறிவித்துக் கொண்டவர்கள் இப்போது ரூ.50,000/- வரை நேரடியாக தங்கள் வங்கிக் கணக்குகளின் மூலம் ஏற்றுக்கொள்ள முடியும்.

சந்தேகங்கள் மற்றும் கேள்விகள்

சந்தேகங்கள் மற்றும் கேள்விகள்

இந்த அப்டேட்டில் 'பேடிஎம் கம்யூனிட்டி பாரம்' என்ற விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது பயனர்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான ஒரு மேடையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பேடிஎம் - வங்கி : பண பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Paytm introduces five new features in its wallet. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X