கண்ணுக்குத் தெரியாத தொலைக்காட்சி பானாசோனிக் அசத்தல்!

பானாசோனிக் நிறுவனம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் புதிய வகை தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இது யார் கண்ணுக்கும் தெரியாது.

By Meganathan
|

தொழில்நுட்ப வளர்ச்சி சில சமயம் பயனுள்ளதாக இருந்தாலும் பல சமயங்களில் நமக்கு விசித்திரமாகவே தெரிகின்றது. இதனை அப்பட்டமாக நிரூபித்துள்ளது பிரபல தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான பானாசோனிக்.

கண்ணுக்குத் தெரியாத தொலைக்காட்சி பானாசோனிக் அசத்தல்!

பானாசோனிக் நிறுவனம் சமீபத்தில் புதிய வகை தொலைக்காட்சி ப்ரோட்டோடைப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கண்ணாடி மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சியினை அந்நிறுவனம் 'இன்விசிபில் டிவி' அதாவது கண்ணுக்கே தெரியாத டிவி என அழைக்கின்றது.

இந்த ப்ரோட்டோடைப் டிவியானது அதிகளவு திறன் கொண்ட காட்சிகளை பிரதிபலிக்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த டிவியில் இருக்கும் OLED ஸ்கிரீன் ஃபைன் மெஷ் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு சறுக்கிச் செல்லும் கதவில் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கண்ணுக்குத் தெரியாத தொலைக்காட்சி பானாசோனிக் அசத்தல்!

பின்புறம் இருந்து வெளிச்சம் பட்டாலும் டிவியின் படங்கள் தெரியும், வெளிச்சம் குறைக்கப்படும் போதும் படம் தெளிவாகத் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் டிவிக்கு பின் புறம் இருக்கும் அலமாரிகளை பார்க்கும் போது இந்த ஸ்கிரீன் டிரான்ஸ்பேரண்ட் மோடிற்கு மாறி விடும், திரையைப் பார்க்கும் போது ஸ்கிரீன் மோடிற்கு மாறி விடும்.

பானாசோனிக் நிறுவனத்தைப் பொருத்த வரை இந்தத் தொலைக்காட்சியானது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தொலைக்காட்சி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Panasonic develops 'invisible' TV that looks like a glass

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X