ஒப்போ F1s தீபாவளி லிமிட்டெட் எடிஷன் வெளியிடப்பட்டது!

Written By:

ஒப்போ நிறுவனம் தனது புதிய F1s தீபாவளி லிமிட்டெட் எடிஷன் கருவிகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. முன்பு வெளியான ரூ.17,990 எனும் அதே விலையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் கருவிக்கான முன்பதிவுகள் அக்டோபர் 8 முதல் 13 வரை நடைபெறும் என்றும் இதன் விற்பனை அக்டோபர் 14 ஆம் தேதி முதல் ஸ்னாப்டீல் தளத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை ஒப்போ F1s ஒரே மாதிரி தான் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒப்போ F1s ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. எனினும் தீபாவளியொட்டி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பேக் பேனல் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கையொப்பம்

அப்படியாக புதிய லிமிட்டெட் எடிஷன் கருவியில் ரித்திக் ரோஷன் மற்றும் சோனம் கபூர் ஆகியோரின் கையொப்பங்கள் புதிய லிமிட்டெட் எடிஷன் கருவியில் இடம் பெற்றுள்ளன. மேலும் தீபாவளியை சிறப்பிக்கும் தீம் மற்றும் ஐகான் போன்றவையும் இடம் பெற்றுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

செல்பீ கேமரா

ஒப்போ F1s கருவியில் 16 எம்பி முன்பக்க கேமரா, 1/3.1-இன்ச் சென்சார் மற்றும் f/2.0 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இதோடு செல்பீ சார்ந்து Beautify 4.0 எனும் ஆப் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் அழகான செல்பீக்களை எடிட் செய்ய முடியும். (எடிட் செய்யாமல் யாரும் போட்டோக்களை மற்றவர்களுடன் பகிர்வதில்லை)

கைரேகை ஸ்கேனர்

இந்த ஸ்மார்ட்போன் கருவியின் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் இருப்பதோடு இது 0.22 நொடிகளில் கருவியினை அன்லாக் செய்யும் திறன் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிஸ்ப்ளே

டூயல் சிம் கொண்டிருக்கும் ஒப்போ F1s ColorOS 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது. இதோடு 5.5 இன்ச் எச்டி திரை ஐபிஎஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 மூலம் பாதுகாக்கப்படுகின்றது. இந்தக் கருவியானது ஆக்டா கோர் மீடியாடெக் MT6750 SoC, Mali-T860 MP2 GPU மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

கனெக்டிவிட்டி

13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் 4ஜி எல்டிஇ, வை-பை 802.11 b/g/n, யுஎஸ்பி OTG, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் 4.0 கொண்டிருக்கின்றது. இத்துடன் 3075 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Oppo F1s Diwali Limited Edition Launched Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்