வாவ் : இலவச மொபைல் இன்டர்நெட்..!

Posted by:

ஓபேரா (Opera) நிறுவனம் தனது 20 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, 20 இந்திய நகரங்களுக்கு இலவசமாக மொபைல் இன்டர்நெட் வசதியை வழங்க திட்டமிட்டுள்ளது..!

கூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..?

பெரும்பாலும் அனைத்து மக்களிடமும் மொபைல் இருந்தும்கூட, அதிகம் பேர் இன்டர்நெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள், அப்படியானோர்களை நிச்சயம் இந்த இலவச மொபைல் இன்டர்நெட் திட்டம் சென்றடையும் என்று ஓபேரா நிறுவனம் நம்புகிறது. மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இலவச வைபை :

'வாவ்' (WOW) அதாவ,து வெப் ஆன் வீல்ஸ் (Web on Wheels) என்ற திட்டத்தின் கீழ், 20 இந்திய நகரங்களுக்கு இலவச வைபை (WiFi) வசதியை வழங்க உள்ளது ஓபேரா..!

வைபை கார் :

அடுத்த 10 மாதங்களில் ஓபேராவின் இலவச வைபை வழங்கும் கார் ஆனது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணிக்க இருக்கிறது..!

வாவ் கார் :

இலவச வைபை வழங்கும் ஓபேரா காரின் பெயர் - வாவ் கார் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

பயணம் :

இந்த வாவ் கார் ஆனது ஒவ்வொரு இந்திய நகரங்களின் அனைத்து முக்கியமான பகுதிகளுக்கும் பயணிக்க இருக்கிறது..!

வைபை செட்டிங் :

இந்த வாவ் காரின் இலவச வைபை வசதியை பெற முதலில் உங்கள் மொபைலின் வைபை செட்டிங்கை ஆன் செய்ய வேண்டும்.

செலக்ட் :

பின் வயர்லெஸ் நெட்வர்க் (Wireless Network) மூலம் 'ஓபேரா மினி ஃப்ரீ வைபை'யை செலக்ட் செய்ய வேண்டும்.

சைன் இன் :

பின் ஓபேரா மினி ப்ரவுசரில் ஒன் டைம் பாஸ்வோர்ட் மூலம், சைன் இன் (Sign In) செய்து கொள்ளலாம்.

பகுதி மக்கள் :

சைன் இன் செய்த பின் ஒவ்வொரு தினமும் வாவ் கார் நியமிக்கும் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு இலவசமாக இன்டர்நெட்டை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்..!

டேட்டா லிமிட் :

20 நிமிடங்களை தவிர்த்து, இவ்வளவு தான் பயன்படுத்த வேண்டும் என்ற டேட்டா லிமிட் (Data Limit) எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது..!

ஆரம்பம் :

ஆக்ராவில் வாவ் கார், தன் பயணத்தை ஆரம்பிக்க இருக்கிறது..!

வட இந்தியா :

முதலில் வட இந்திய நகரங்களை சுற்றி பயணிக்க திட்டமிட்டுள்ளது ஓபேராவின் வாவ் கார்...!

நகரங்களில் :

அதாவது லக்னோ, வாரணாசி, கான்பூர், அலகாபாத் போன்ற வட இந்திய நகரங்களில் வாவ் கார் பயணிக்க இருக்கிறது..!

தகவல் இல்லை :

இந்தியாவின் பிற பகுதி நகரங்களுக்கும், முக்கியமாக தென்னிந்தியாவிற்கும் எப்போது இந்த வாவ் கார் வலம் வரவிருக்கிறது என்ற தகவலை ஓபேரா குறிப்பிடவில்லை..!

பிரபலம் :

இதன் மூலம் ஓபேரா சாப்ட்வேரின் மொபைல் ப்ரவுசரான ஓபேரா மினி, மேலும் பிரபலம் அடையும் என்பதில் சந்தேகமில்லை..!

பயனீட்டாளர்கள் :

ஏற்கனவே ஓபேரா, இந்தியாவில் 55 மில்லியன் பயனீட்டாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

தமிழ் கிஸ்பாட் :

வாவ் கார் தென்னிந்திய நகரங்களுக்கு பயணிக்க திட்டமிட்டால், தமிழ் கிஸ்பாட் வாசகர்களுக்கு நிச்சயம் தெரிவிக்கப்படும்.! மேலும் பல சுவாரசியமான தொழில்நுட்ப செய்திகளுக்கு - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
The company celebrates its 20th anniversary by offering free mobile internet access in 20 Indian cities.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்