இந்தியாவில் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இடைக்கால தடை

By Meganathan
|

இந்தியாவில் மேலும் ஒரு தடை, இம்முறை ஒன்ப்ளஸ் மீது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை, விளம்பரம் மற்றும் இறக்குமதி என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

[2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்]

இது குறித்த உத்தரவை பிறப்பித்த தில்லி உயர்நீதிமன்றம், ஒன் ப்ளஸ் நிறுவனம் சைனோஜென் பிரான்டிங் கொண்ட எந்த கருவிகளையும் இந்தியாவில் விற்பனை, விளம்பரம் மற்றும் இறக்குமதி செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் தொடர்ந்த வழக்கில் ஏம்பியன்ட் சேவைகள் மற்றும் அப்ளிகேஷன் வினியோகிக்க ஒன் ப்ளஸ் நிறுவனம் சைனோஜென் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இடைக்கால தடை

இதன் காரணமாக தடை விதிக்கப்பட்டாலும் ஒன் ப்ளஸ் நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இறக்குமதி மற்றும் விற்பனைக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியாவில் இருக்கும் ஒன்ப்ளஸ் கருவிகளை விற்பனை செய்ய முடியும்.

[அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள 'ஸ்கைப்']

தடை காலம் குறித்து தற்சமயம் அதிக தகவல்கள் இல்லாத நிலையில் ஒன்பள்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்யுமா என்பதும் கேள்விகுறியாக உள்ளது. இருந்தும் இருந்தாலும் ஒன்ப்ளஸ் சைனேஜென் நிறுவனத்திடம் இழப்பீடு கோர முடியும், ஆனால் இதற்கு கலிபோர்னியா நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Temporarily Banned In India. OnePlus One is banned in India! Following the plea by Micromax, which now has exclusive rights for using CyanogenMod’s software in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X