இலவசமாக கிடைக்கும் ஒன்ப்ளஸ் விஆர் ஹெட்செட்கள்..!

Written By:

கடந்த மாதம் ஒன்ப்ளஸ் 2 ஜூலை 27 ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து ஒன்ப்ளஸ் கார்டுபோர்டு எனும் கருவியை அறிவித்திருக்கின்றது. இந்த கருவியானது வியாபார நோக்கில் பணம் சம்பாதிக்க அறிவிக்கப்படவில்லை என்று அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் விஆர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த கருவியை எந்த ஸ்மார்ட்போனுடனும் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகளவிலான கேம்ஸ், மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை அனுபவிக்க முடியும்.

இலவசமாக கிடைக்கும் ஒன்ப்ளஸ் விஆர் ஹெட்செட்கள்..!

ஒன்ப்ளஸ் கார்டுபோர்டு வாங்க வாடிக்கையாளர்கள் நாளை நிறைவடையும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

இலவசமாக கிடைக்கும் ஒன்ப்ளஸ் விஆர் ஹெட்செட்கள்..!

சைன் அப் செய்து கலந்து கொள்வது

ஹெச்டெ்களை இலவசமாக பெற சைன் அப் செய்ய வேண்டும், வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பரோட்டி ஜூலை 3 ஆண் தேதி நிறைவு பெறுகின்றது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவர்.

ஒன் ப்ளஸ் கார்டுபோர்டுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் ரூ.99க்கு அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகின்றது. சரியாக விற்பனை துவங்கும் நாள் சமூக வலை தளங்களில் விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
OnePlus has revealed the pricing of its recently announced Cardboard virtual reality headset for the Indian market.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்