8 GB ரேம் மற்றும் டூயல் கேமிரா வசதியுடன் வெளிவரவுள்ள ஒன்ப்ளஸ் 5

8 GB ரேம் மற்றும் டூயல் கேமிரா வசதியுடன் வெளிவரவுள்ள ஒன்ப்ளஸ் 5

By Siva
|

குறைந்த விலையில் நிறைந்த வசதிகள் கொண்ட அதிநவீன டெக்னாலஜி ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிடும் நிறுவனமான ஒன்ப்ளஸ் நிறுவனம் மிக விரைவில் ஒன்ப்ளஸ் 5 என்ற புதிய மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் வெளியிட்ட ஒன்ப்ளஸ் 4, சீனாவில் தோல்வி அடைந்ததால் வேறு நாடுகளில் வெளியாகவில்லை

8 GB ரேம் மற்றும் டூயல் கேமிரா வசதியுடன் வெளிவரவுள்ள ஒன்ப்ளஸ் 5

எனவே இந்தியவில் ஒன்ப்ளஸ் 3T மாடலுக்கு பின்னர் வெளிவரவுள்ள இந்த ஒன்ப்ளஸ் 5 மாடல், இதுவரை இல்லாத அளவில் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த ஒன்ப்ளஸ் 5 மாடலில் 8 GB ரேம் இருக்கும் என்று கசிந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முந்தைய மாடலான ஒன்ப்ளஸ் 3 மாடலில் 6GB ரேம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

பெஞ்ச்மார்க் பட்டியலில் சிக்கியது : சியோமி மி 6 மற்றும் மி மேக்ஸ் 2.!

மேலும் இந்த போன் குறித்த பிற விபரங்களும் இணையதளங்களில் கசிந்துள்ளது. இந்த ஒன்ப்ளஸ் 5 மாடலின் பிராஸசர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் ஆக இருக்கும் என்றும் இந்த சிப்செட் வகை சாம்சங் கேலக்ஸி S8 கேலக்ஸியில் பயன்படுத்தப்பட்ட சிப்செட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஒன்ப்ளஸ் 5 மாடலின் டிஸ்ப்ளே 1440x2560 ரெசலூசன் கொண்டவை என்றும் செய்திகள் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய ஒன்ப்ளஸ் மாடலில் 1080x1920 பிக்சல் மட்டுமே இருந்த நிலையில் ஒன்ப்ளஸ் 5 மாடல் அதிக ரெசலூசனை கொண்டு முந்தைய சாதனையை உடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இந்த மாடலில் டூயல் கேமிரா செட்டப் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கல் கசிந்துள்ளன.

விவோ வி5 ப்ளஸ் ஐபிஎல் லிமிடெட் எடிஷன், இந்தியாவில் விற்பனை.!

கடந்த சில மாதங்களாக டூயல் கேமிரா மாடல் உலகெங்கிலும் டிரெண்டாக இருக்கின்றது. ஆனால் ஒன்ப்ளஸ் 5 மாடலில் உள்ள டூயல் கேமிரா சற்று வித்தியாசமானது. இந்த டூயல் கேமிராக்கள் மற்ற போன்களில் இருப்பது போன்று கிடைமட்டமாக (Horizontal) இல்லாமல் இந்த மாடலில் டூயல் கேமிராக்கள் செங்குத்தாக அமைந்துள்ளன.

இந்த மாடல் வெளியாவது நிறுவனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டாலும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த மாடல் வாடிக்கையாளர்களின் கைகளில் தவழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த மாடல் குறித்து மேலே கண்ட தகவல்கள் அனைத்தும் இணையதளங்களில் கசிந்த தகவலின் அடிப்படையில் கூறப்பட்டவை என்பதும் உண்மையான தகவல்கள் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Latest rumor says that OnePlus 5 will come with 8GB of RAM.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X