ஓலா : சென்னையில் படகு சேவை ஆரம்பித்தது..!

Posted by:

கனமழை காரணமாக தண்ணீர் தீவாய் மாறியுள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா படகு சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க மிகவும் கைத்தேர்ந்த படகோட்டிகளை ஓலா பயன்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஓலா படகு சேவை :

சென்னையில் நீர் சூழ்ந்த பகுதிக்குள் சிக்கி தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல இந்த ஓலா படகு சேவை பயன்படுத்தப்படுகிறது.

இலவசமாக :

மேலும் மக்களுக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்களை இலவசமாக கொண்டு சேர்க்கவும் இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேவை :

மேலும் அடுத்த 3 நாட்களுக்கு இந்த சேவையை தொடர இருப்பதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணி :

சென்னை தீயணைப்பு துறையிடம் இருந்து பெறும் தகவலின் அடிப்படையில் மீட்பு பணிகளை செய்வதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் :

ஓலாவின் இந்த படகு சேவையை மிகவும் கைத்தேர்ந்த படகோட்டிகள் மற்றும் சில மீனவர்கள் கையாள்கின்றன.

அளவு :

இரண்டு படகோட்டிகளை கொண்ட ஓலா படகு போதுமான அளவு குடையுடன் சுமார் 5 முதல் 9 பேரை மீட்க கூடிய அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Ola launches boat service in flood affected Chennai. Read more in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்